For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுகதான் ஜல்லிக்கட்டை பாதுகாப்பாக நடத்தியது..... அதிமுகவிற்கு திராணியில்லை - ஸ்டாலின்

தை திருநாளில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு திமுக ஆட்சி காலத்தில் பாதுகாப்பாக நடத்தப்பட்டது என்று திமுக பொருளாளரும், எதிர்கட்சித்தலைவரான ஸ்டாலின் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிக்கள் நடத்தப்படும்.

உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து கடந்த சில ஆண்டுகளாக தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பல போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் போட்டி நடந்த பாடில்லை. இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை வர உள்ளது.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி ஸ்டாலின் தலைமையில் அலங்காநல்லூரில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பங்கேற்றனர்.

ஸ்டாலின் பேச்சு

ஸ்டாலின் பேச்சு

ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஸ்டாலின் தமிழர் விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி தர வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் அவர் தமிழகர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை பொங்கல் பண்டிகையன்று நடத்த வேண்டும் என்பதற்காகவே இந்த ஆர்பாட்டம் நடத்தப்படுகிறது.

அதிமுகவிற்கு திராணியில்லை

அதிமுகவிற்கு திராணியில்லை

திமுக ஆட்சி காலத்தில்தான் ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பாக நடத்தப்பட்டது. ஆளுங்கட்சியாக உள்ள அதிமுக, நாடாளுமன்றத்தில் 50 உறுப்பினர்களை கொண்டுள்ளது. அவர்களுக்கு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த திராணியில்லை என்று கூறினார்.

உணர்வுகளோடு விளையாடுவதா?

உணர்வுகளோடு விளையாடுவதா?

இது கட்சிக்காக கூடிய கூட்டமல்ல... தமிழன் என்ற உணர்வோடு கூடிய கூட்டம். இன்னும் சில தினங்களில் பொங்கல் பண்டிகை வர உள்ளது. எனவே அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும். பிரதமர் மோடி தமிழக மக்களின் உணர்வுகளோடு விளையாட வேண்டாம்.

காட்சிப்பொருளாக்க வேண்டாம்

காட்சிப்பொருளாக்க வேண்டாம்

தமிழகத்தில் 5 ஆண்டுகளாக ஆட்சி நடைபெறவில்லை. வெறும் காட்சிதான் நடைபெறுகிறது. எனவே ஆளும் கட்சி ஜல்லிக்கட்டுக்காக மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இனியும் காட்சிப்பொருளாக இருக்க வேண்டாம். காளைகளை காட்சிப்பொருளாக மட்டுமே வைத்திருக்க வேண்டாம் என்றும் கூறினார் ஸ்டாலின்.

English summary
DMK leader M K Stalin has said that DMK govt conducted Jallikkattu safely in earlier rule.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X