For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சொல்லச் சொல்லக் கேட்காமல் குர்ஷித் இலங்கை போனதால் திமுக அதிர்ச்சி- டெசோவைக் கூட்டுகிறது

Google Oneindia Tamil News

DMK convenes Teso meeting
சென்னை: பலமுறை வேண்டுகோள் விடுத்தும், பிரதமரை நேரில் பார்த்து கோரிக்கை விடுத்தும், தீர்மானங்கள் போட்டு வலியுறுத்தியும் அதற்கு மத்திய அரசு சற்றும் பணியாமல், வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளது.

இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய டெசோ அமைப்பின் கூட்டத்தை நவம்பர் 17ம் தேதி அது கூட்டியுள்ளது. இதில் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.

நேற்று செய்தியாளர்களிடம் திமுக தலைவர் கருணாநிதி பேசுகையில், எங்களுக்குள்ளும் போராட்ட உணர்வுகள் இருக்கின்றன. எப்போது, எப்படி என்பது குறித்து முடிவெடுப்போம் என்று கூறியிருந்தார். எனவே டெசோ சார்பில் போராட்ட அறிவிப்பு குறித்து முடிவெடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நவம்பர் 17ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் டெசோ ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

English summary
DMK has called for TESO meeting after Indian external affairs minister Kurshid has dashed to Colombo despite TN's continuous pleas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X