For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுகவின் ஆர்.கே.நகர் பாட்டை லைட்டா டச்சப் செய்து திமுக நக்கல்.. வைரலாகும் வீடியோ

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்காக அதிமுகவின் ஐடி அணி தீம் பாட்டு போட்டு பட்டையை கிளப்பி வருகின்றனர். இதற்கு எசப்பாட்டு போட்டு பதிலடி கொடுத்து வருகிறது திமுக.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஆர்.கே. நகரில் அதிமுகவின் தீம் பாடலுக்கு திமுக அவர்கள் பாட்டிலேயே பதிலடி கொடுத்து வருகின்றனர். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆர்.கே.நகருக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, தினகரன் அணி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

ஆர்.கே. நகரில் கடந்த 1ஆம் தேதியில் இருந்து பிரச்சாரம் களைகட்டியுள்ளது. 59 பேர் போட்டியிடுகின்றனர் என்றாலும் 5 வேட்பாளர்களுக்கு இடையேதான் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

அதிமுக ஐடி அணி

அதிமுக ஐடி அணி

அதிமுக ஐடி சார்பில் ஒரு ராப் பாட்டு போட்டு ஓட்டு கேட்கின்றனர். சமூக வலைத்தளங்களில் இந்த பாடல் வைரலாகி வருகிறது. வரவேற்பும், எதிர்ப்பும் கலந்த விமர்சனம் வெளியாகி வருகிறது. அதிமுக அணிகள் இணைப்பு, இரட்டை இலை மீட்பு, எம்ஜிஆர், ஜெயலலிதா பேச்சு ஆகியன இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த பாடல் ஓபிஎஸ் அணி தனியாக பிரிந்து போட்டியிட்ட போது உருவான பாடல்.

இதுவே ஓபிஎஸ் அணியின் பாடல்தான்

இதுவே ஓபிஎஸ் அணியின் பாடல்தான்

அண்ணன் என்று ஓபிஎஸ்சை காட்டி இரட்டை மின்கம்பத்திற்கு அப்போது வாக்கு கேட்டனர். இப்போது அதையே பட்டி டிங்கரிங் செய்து ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் ஒட்ட வைத்திருக்கின்றனர். சுட்டபாடலை இப்போது கொஞ்சம் மாத்தி போட்டு வைரலாக்குகின்றனர்.

யார் குற்றம்

யார் குற்றம்

என்னத்த கழட்டிட்டாங்க என்று இப்படி ஆட்டம் போடுகிறார்கள் என்று பதிலடி கொடுக்கின்றனர் திமுகவினர். அழுக்கான ஆர்.கே. நகரையும், மீன்பிடி துறைமுகத்தையும் போட்டு பாடலை கொஞ்சம் திருப்பி போடுகின்றனர்.

வெரட்டி வெளுக்கணும்

வெரட்டி வெளுக்கணும்

இவங்களைப் பார்த்த வெரட்டி வெரட்டி வெளுக்கத் தோணுது என்று கூறி அதிமுகவின் பாட்டிலேயே மிக்ஸ் செய்திருக்கின்றனர் திமுகவினர். திமுக ஐடி அணி சார்பில் இந்த பாடலை வைரலாக்கி வருகின்றனர்.

English summary
DMK has counter ADMK IT wing theme song for R.K.Nagar campaign. It goes viral in social medias. R.K.Nagar by election is conducting on December 21.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X