சென்னையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. 8 தீர்மானங்கள் நிறைவேற்றம்!!

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
திமுக தலைவராக மு.க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட பின்னர், அவர் தலைமையில் இன்று அக்கட்சி மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு தொடங்கியது
இதில் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தல், லோக்சபா தேர்தல் ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும்
விழுப்புரத்தில் வரும் 15ஆம் தேதி நடைபெறும் திமுகவின் முப்பெரும் விழா குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்ககப்பட்டது

பாஜக கனவுகளை நிராகரிப்போம்
இதைத்தொடர்ந்து திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் காவிமயமாக்கும் மத்திய பாஜகவின் கனவுகளை நிராகரித்து வீழ்த்துவோம். அதிமுகவின் ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்.

கடைமடை காவிரி நீர்
வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும் வழிமுறையை பின்பற்றுவோம். கடைமடைக்கு செல்லாமல் காவிரி நீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை தேவை.

பந்துக்கு ஆதரவு
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தாமதிக்காமல் விடுவிக்க வேண்டும். பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து செப்டம்பர் 10ஆம் தேதி நடக்கும் பந்துக்கு ஆதரவு.

அரசைக் கண்டித்து போராட்டம்
குட்கா முறைகேட்டில் சிக்கியுள்ள அமைச்சர் டிஜிபியை பதவி நீக்க வேண்டும். அதிமுக அரசைக் கண்டித்து செப்டம்பர் 18ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக போராட்டம் நடத்துவது ஆகிய 8 தீர்மானங்கள் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.