For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓபிஎஸ் உட்பட 12 எம்எல்ஏக்களை தகுதி நீக்க வழக்கு.. திமுக திடீர் கேவியட் மனு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ஓ.பி.எஸ் உள்ளிட்ட எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக சார்பில் தாக்கல் செய்த வழக்கில் தங்களை கேட்காமல் எந்த முடிவையும் எடுக்க கூாது என ஹைகோர்ட்டில் திமுக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

அதிமுக கொறடா உத்தரவை மீறி, எடப்பாடி அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்த, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. . நீதிபதி ரவிச்சந்திர பாபு இந்த வழக்கை தினகரன் எம்.எல்.ஏக்கள் வழக்குடன் இணைத்து விசாரித்து வருகிறார். வரும் நவம்பர் 3 தீர்ப்பு வழங்க உள்ளார்.

DMK filed Caviet petition in front of Chennai High Court

இந்த நிலையில், இந்த வழக்கை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏ செம்மலை உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

இந்த நிலையில், திமுக சார்பில் சென்னை ஹைகோட்டில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எந்த முடிவை எடுத்தாலும் எங்கள் தரப்பையும் கேட்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
DMK filed Caviet petition in front of Chennai High Court over OPS faction MLAs issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X