For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல்: பொன்.ராதாகிருஷ்ணன் பகீர் தகவல்

திமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் ஆலை துவங்க அனுமதி அளிக்கப்பட்டது என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை : ஸ்டெர்லைட் ஆலையைத் துவங்க அனுமதி அளித்தது திமுக ஆட்சியில் தான் என்று பாஜக மத்திய இணை அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனால் தமிழகம் முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்துவருகின்றன.

DMK gave permissionm to Sterlite Industry says Pon Radhakrishanan

இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், தமிழகத்தில் தொடர்ந்து பயங்கரவாத செயல்கள் நடந்துவருகின்றன. பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்தேன்.

ஆனால், பயங்கரவாதிகளை அடக்க தமிழக அரசு எந்த வித முயற்சியும் எடுக்கவில்லை. அப்படி எடுத்திருந்தால், துப்பாக்கிசூடு நடத்தவேண்டிய நிலை வந்திருக்காது.

திமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் ஆலை துவங்க அனுமதி அளிக்கப்பட்டது . ஆனால், இப்போது அவர்கள் ஒன்றுமே தெரியாதது போல போராடுவது வேடிக்கையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

English summary
DMK gave permission to Sterlite Industry says Pon. Radhakrishanan. Central Minister for State Pon. Radhakrishnan says that, Tamilnadu Government failed to take control on fringe Elements.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X