For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏற்காடு - திமுக வேட்பாளர் மாறன் டெபாசிட்டை வென்றார்!

Google Oneindia Tamil News

DMK gets back its deposit in Yercaud
சேலம்: ஏற்காடு இடைத் தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பெ. மாறன் தனது டெபாசிட்டைத் திரும்பப் பெறு்ம் அளவுக்கு வாக்குகளைப் பெற்றது திமுகவுக்கு ஆறுதல் அளித்துள்ளது.

அதேசமயம், திமுகவை டெபாசிட் இழக்க வைக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தும், அது நடக்காமல் போனதால் எங்கே நடவடிக்கை பாயுமோ என்ற பீதியில் அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

திமுக வேட்பாளர் மாறன் இத்தேர்தலில் 64,655 வாக்குகள் பெற்று 2வது இடத்தைப் பிடித்தார். ஏற்காடு தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 40 ஆயிரத்து 290 பேர். இதில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 444 வாக்காளர்கள் வாக்களித்தனர்.

பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பகுதி வாக்குகளுக்கு மேல் பெற்றார் டெபாசிட் தொகை திரும்பக் கிடைக்கும். அந்த வகையில், 35,741 வாக்குகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு மட்டுமே டெபாசிட் கிடைக்கும். எனவே மாறனுக்கு டெபாசிட் கிடைத்து விட்டது.

இனி எத்தனை அதிமுகவினருக்கு ஆப்பு வரப் போகிறதோ...?

English summary
DMK has got back its deposit in Yercaud by poll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X