திமுக வேட்பாளர் பட்டியலில்... கீதா ஜீவன், பூங்கோதை உள்பட 19 பெண்களுக்கு வாய்ப்பு
சென்னை: திமுக வேட்பாளர் பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள் கீதா ஜீவன், பூங்கோதை ஆலடி அருணா, திமுக தலைவர் என்.வி.என்.சோமு மகள் டாக்டர் எஸ்.என்.கனிமொழி உள்பட 19 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திமுக அறிவித்துள்ள 19 பெண் வேட்பாளர்களில் 6 பேர் மருத்துவர்களும், 3 ஆசிரியர்களும், 3 வழக்கறிஞர்களும் இடம் பெற்றுள்ளனர். மேலும், 9 தனித் தொகுதியிலும் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பெண் வேட்பாளர்கள் விவரம்:
பொன்னேரி (தனி) - டாக்டர் கே.பரிமளம்
ராதாகிருஷ்ணன் நகர் - சிம்லா முத்து சோழன்
தியாகராயநகர் - டாக்டர் எஸ்.என்.கனிமொழி
செங்கல்பட்டு - ம.வரலட்சுமி மதுசூதனன்
அரக்கோணம் (தனி) - எஸ்.பவானி
கீழ்வைத்தியணான்குப்பம் - வி.அமலு
ஜோலார்பேட்டை - சி.கவிதா தண்டபாணி
ஊத்தங்கரை - டாக்டர் எஸ். மாலதி நாராயணசாமி
திண்டிவனம் (தனி) - பி.சீத்தாபதி சொக்கலிங்கம்
வானூர் (தனி) - இரா.மைதிலி
கெங்கவல்லி (தனி) - ஜெ.ரேகா பிரியதர்ஷினி
பவானிசாகர் (தனி) - ஆர்.சத்தியா
கோவை வடக்கு - மீனா லோகு
தஞ்சாவூர் - டாக்டர் அஞ்சுகம் பூபதி
மானாமதுரை (தனி)- சித்திராச்செல்வி
சோழவந்தான் (தனி) - டாக்டர் ஸ்ரீ பிரியா தேன்மொழி
தூத்துக்குடி - பெ.கீதா ஜீவன்
சங்கரன்கோவில் (தனி)- க.அன்புமணி கணேசன்
ஆலங்குளம் - டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா