For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஜயகாந்த் கட்சியால் வாக்குகளை இழக்கப்போவது திமுகவா?, அதிமுகவா? புள்ளி விவரம் சொல்வது இதைத்தான்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிக கூட்டணி காரணமாக, அதிமுகவைவிட, திமுகவுக்கே அதிக வாக்குகள் இழப்பு ஏற்படும் என்பதை பழைய புள்ளி விவரங்கள் பட்டவர்த்தனமாக காட்டுகின்றன. திமுக தலைமை, விஜயகாந்த்தை தங்கள் பக்கம் சேர்த்துக்கொள்ள கடைசிவரை முயற்சி செய்ததன் நோக்கமும், இந்த உண்மையை அறிந்ததால்தான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

பாஜக-அதிமுக-திமுக நேரடியாக மோதும் தொகுதிகளில் அதிமுகவின் வாக்குகள்தான் சிதறுகிறதாம். அதேபோலதான், தேமுதிக-திமுக-அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகளில் திமுக வாக்குகள்தான் அதிகமாக சிதறுகிறது.

2005ல் தேமுதிகவை ஆரம்பித்தார் விஜயகாந்த். 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அக்கட்சி தனித்து போட்டியிட்டது.

மும்மூர்த்திகள்

மும்மூர்த்திகள்

1971ம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தை கருணாநிதி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய மூன்றே முதல்வர்கள்தான் ஆட்சி நடத்தியுள்ளனர். நடுவே நடந்த சட்ட போராட்டங்களின்போது, பன்னீர்செல்வம் முதல்வர் பதவிக்கு வந்தாலும், அது ஜெயலலிதா அனுமதியோடு நடந்த விஷயம் என்பதால் அதுவும் ஜெயலலிதா கணக்கில் சேருகிறது.

விஜயகாந்த் மாற்று

விஜயகாந்த் மாற்று

அதேநேரம், விஜயகாந்த், தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தனியாக தேர்ந்தலை சந்தித்து கணிசமான வாக்குகளை பெற்றது அரசியல் பார்வையாளர்களை அவரது கட்சி பக்கம் திருப்பியது.

சிதறடித்த விஜயகாந்த்

சிதறடித்த விஜயகாந்த்

திமுக ஆளும் போது ஏற்படும் கசப்புகளால், அதிமுக அடுத்த தேர்தலில் பலன்பெறுவதும், அதிமுக ஆட்சி முடியும்போது, அதனால் திமுக பலன்பெறுவதும் என்று பல காலமாக இருந்த நிலை மாறி, அதிருப்தி வாக்குகளை முதல்முறையாக பெரிய அளவில் சிதறடித்தவர் விஜயகாந்த்.

புள்ளி விவரம்

புள்ளி விவரம்

2011ல் அதிமுகவோடு கூட்டணி வைத்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது தேமுதிக. அதேநேரம், 2014 லோக்சபா தேர்தலில் பாஜக, பாமக, மதிமுகவுடன் கூட்டணி வைத்து 3வது அணியாக களமிறங்கியது தேமுதிக. இந்த தேர்தல் முடிவுகளையும், தேமுதிக வாங்கிய வாக்குகளையும், வைத்து பார்த்தால்தான் திமுகவுக்கு அது எவ்வளவு பாதிப்பை கொடுத்துள்ளது என்பது புரியும்.

மூன்று கட்சிகளின் நேரடி போட்டி

மூன்று கட்சிகளின் நேரடி போட்டி

2014 லோக்சபா தேர்தலில் தேமுதிக 14 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 84 சட்டசபை தொகுதிகள் அடங்கியிருந்தது. அந்த 84 சட்டசபை தொகுதிகளில், 78 தொகுதிகளில் அதிமுக, திமுக மற்றும் தேமுதிக இடையே நேரடி போட்டி இருந்தது.

திமுகவுக்கு இழப்பு

திமுகவுக்கு இழப்பு

இதில் கட்சிகள் வாங்கிய வாக்குகளை வைத்து பார்க்கும்போது, திமுகவின் வாக்குகளை தேமுதிக அதிகமாக இழுத்துள்ளது தெரியவருகிறது. அதிமுகவில் இருந்து தேமுதிக இழுத்த வாக்குகளைவிட இரண்டரை மடங்கு அதிகமாக திமுகவிடமிருந்துதான் வாக்குகளை காந்தம் போல இழுந்துள்ளது விஜயகாந்த்தின் கட்சி.

அதிகம் இழந்தது திமுக

அதிகம் இழந்தது திமுக

உதாரணத்திற்கு, தேமுதிக பெற்ற 100 வாக்குகளில், திமுகவிடமிருந்து கிடைத்தது 25 வாக்குகள் என்றால், அதிமுக இழந்தது 10 ஓட்டுக்களைத்தான். அதேநேரம், பாஜக-அதிமுக-திமுக நேரடியாக மோதிய தொகுதிகளில், திமுகவிடமிருந்து பாஜகவுக்கு சென்ற வாக்குகளைவிட, அதிமுகவிடமிருந்துதான் அதிக வாக்குகள் போயுள்ளன.

பாஜக, அதிமுக

பாஜக, அதிமுக

கொள்கை அளவில் பாஜக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும், குறிப்பிட்ட சதவீத மக்கள் ஒரே மாதிரியாகத்தான் கணிக்கிறார்கள். எனவேதான், அவ்விரு கட்சிகளும் நேரெதிராக நிற்கும்போது, அவற்றின் வாக்குகள் சிதறுகின்றன. அதே நிலைதான், திமுகvsதேமுதிக என்று வரும்போதும் நிகழ்கிறது.

இந்த விவரத்தை பாருங்கள்

இந்த விவரத்தை பாருங்கள்

2014 லோக்சபா தேர்தலில், 19 சட்டசபை தொகுதிகளில், தேமுதிக 10 விழுக்காட்டுக்கு குறைவான வாக்குகளை பெற்றுள்ளது. அந்த தொகுதிகளில் அதிமுகவின் வாக்கு சதவீதம் 49.3-ஆகவும், திமுகவின் வாக்கு சதவீதம் 33.7-ஆகவும் உள்ளது.

திமுகவுக்கு மளமள சரிவு

திமுகவுக்கு மளமள சரிவு

29 சட்டசபை தொகுதிகளில் தேமுதிக 10 முதல் 15 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. அங்கு அதிமுக வாக்கு சதவீதம் 47.3-ஆகவும், திமுக வாக்கு சதவீதம் 30.8-ஆகவும் குறைந்துள்ளது.

தேமுதிகவுக்கு கூடினால் திமுகவுக்கு குறையும்

தேமுதிகவுக்கு கூடினால் திமுகவுக்கு குறையும்

18 சட்டசபை தொகுதிகளில் தேமுதிகவின் வாக்கு சதவீதம் 15 முதல் 20 சதவீதத்திற்குள் இருந்தது. அந்த தொகுதிகளில், அதிமுகவின் வாக்கு சதவீதம் 47.3-ஆகவும், திமுக வாக்கு சதவீதம் 27.2-ஆகவும் குறைந்தது.

அதிமுகவுக்கு பெரிய இழப்பில்லை

அதிமுகவுக்கு பெரிய இழப்பில்லை

7 சட்டசபை தொகுதிகளில் தேமுதிக வாங்கிய வாக்கு சதவீதம் 20 முதல் 25 சதவீதத்திற்குள் இருந்தது. அங்கு அதிமுக 44.8 சதவீத வாக்குகளையும், திமுக 23.4 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன.

விஜயகாந்த் பவர்

விஜயகாந்த் பவர்

இதேபோல, 5 சட்டசபை தொகுதிகளில், தேமுதிக 25 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளை பெற்றுள்ளது. அந்த தொகுதிகளில் அதிமுகவுக்கு கிடைத்த வாக்கு சதவீதம் 41.4. அதேநேரம், திமுகவுக்கு கிடைத்தது 21.2 சதவீதம்தான்.

இப்போதும் எதிரொலிக்குமா?

இப்போதும் எதிரொலிக்குமா?

எங்கெல்லாம் தேமுதிக வாக்கு சதவீதம் அதிகரிக்கிறதோ, அங்கெல்லாம் அதிகமாக வாக்குகளை இழப்பது திமுகதான் என்பது லேட்டஸ்ட் நிலவரம். எனவே இம்முறையும், தேமுதிக-திமுக நேரடியாக மோதும் சட்டசபை தொகுதிகளில் திமுக வாக்குகளை தேமுதிக கபளீகரம் செய்ய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

கருணாநிதி வியூகங்கள்

கருணாநிதி வியூகங்கள்

விஜயகாந்த், மக்கள் நல கூட்டணியோடு இணைந்து போட்டியிடுவது எப்படி பார்த்தாலும், அதிமுகவைவிட திமுகவுக்குதான் பெரும் வாக்கு வங்கி இழப்பை ஏற்படுத்திக்கொடுக்கப்போகிறது என்பதுதான் நிதர்சனம். இதை ஈடு செய்ய கருணாநிதி பல்வேறு வியூகங்களை கையில் எடுக்க கூடும் என்கிறது கள நிலவரம்.

English summary
DMK is losing more vote percentage than AIADMK when the DMDK locked horns with them in the election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X