For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மமதா கூட்டணியில் இணையுமா திமுக? கனிமொழி அளித்த விளக்கம் இதுதான்!

By Raj
Google Oneindia Tamil News

Recommended Video

    மூன்றாவது அணியை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜி- வீடியோ

    சென்னை: பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் இணைவது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியிடம் திமுக எம்.பி கனிமொழி விளக்கம் அளித்திருக்கிறார்.

    தேசிய அளவில் பாஜக, காங்கிரஸுக்கு எதிரான 3-வது அணி உருவாக்க வேண்டும் என்பது குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் மமதா தொலைபேசியில் பேசியிருந்தார். இந்த நிலையில் தற்போது டெல்லியில் முகாமிட்டிருக்கிறார் மமதா பானர்ஜி.

    DMK to join Mamatas Federal Front?

    திமுகவின் ராஜ்யசபா எம்.பி.யான கனிமொழியை மமதா பானர்ஜி சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது ஸ்டாலினுடன் தாம் ஏற்கனவே பேசிய குறித்து மமதா விவரித்திருக்கிறார்.

    இதற்கு பதிலளித்த கனிமொழி, கூட்டணி தொடர்பான முடிவுகளை செயல் தலைவர் ஸ்டாலின் தான் பேசுவார். கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவில் விவாதித்து அதன் பின்னரே முடிவுகள் எடுப்பது திமுகவின் வழக்கம்.

    ஆகையால் நீங்கள் ஸ்டாலினை சந்தித்து பேசுவதுதான் சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார். இதை ஏற்றுக் கொண்ட மமதா பானர்ஜி, கருணாநிதியை பார்க்க வருகிறேன். அப்போது ஸ்டாலினை சந்தித்து பேசுகிறேன் என கூறியிருக்கிறார்.

    அத்துடன் தமிழகத்தின் கள நிலவரத்தையும் விரிவாக கேட்டாராம் மமதா. அதன்பின்னர்தான் செய்தியாளர்களிடம் பேசுகையில் வரும் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என நம்பிக்கையோடு கூறினாராம் மமதா.

    English summary
    Sources said that DMK will discuss on the West Bengal CM Mamata's Federal Front.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X