For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி, மனைவியரின் சொத்து மதிப்பு ரூ62.99 கோடி...

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி, தனக்கு அசையா சொத்து எதுவும் இல்லை என்றும், தனது மனைவி மற்றும் துணைவியாருக்கு ரூ. 62.99 கோடி அளவிற்கு சொத்து உள்ளது என்றும் இன்று தாக்கல் செய்த வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி தனது சொந்த ஊரான திருவாரூரில் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். இதை முன்னிட்டு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

DMK leader Karunanidhi declares assets worth Rs 62.99 crore

வேட்புமனுவில் தாக்கல் செய்த பிராமண பத்திரத்தில் தனக்கு அசையா சொத்து இல்லை என்றும் தனது மனைவி மற்றும் துணைவியார் இருக்கும் ரூ. 62.99 கோடி அளவிற்கு சொத்து இருப்பதாகவும், இதில் அசையும் சொத்து ரூ. 58.77 கோடி என்றும், அசையா சொத்து ரூ. 4.21 கோடி என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது துணைவியார் ராஜாத்தி அம்மாளுக்கு வங்கிக் கடன் ரூ. 11.94 கோடி உள்ளது என்றும், தனது பெயரில் வங்கிக் கடனோ, காரோ, வேளாண் நிலமோ இல்லை என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2014-15 ஆம் ஆண்டில் தனக்கு ரூ. 1,21,41,930 வருமானம் கிடைத்ததாகவும், துணைவியர் மு.க.தயாளு அம்மாளுக்கு ரூ. 9,21,430 வருமானம் வந்தததாகவும், இராசத்தி அம்மாளுக்கு ரூ. 1,16,96,350 வருமானம் வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் தான் இயங்கி வருவதாகவும், ஃபேஸ்புக், டுவிட்டரில் அக்கவுண்ட் உண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி.

கடந்த 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த போது தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் ரூ.44 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் இருந்ததாக வேட்புமனுவுடன் அளித்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருந்தார். கடந்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் வருமானம் 19 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
DMK Chief Karunanidhi has declared assets worth about Rs 62.99 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X