For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹஜ் பயணத்திற்கான மானியத்தை ரத்து செய்தது பாஜகவின் பிற்போக்குத்தனமான நடவடிக்கை : ஸ்டாலின்

ஹஜ் மானியத்தை ரத்து செய்தது பாஜகவின் பிற்போக்குத்தனமான நடவடிக்கை என்று ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    இஸ்லாமியர்களுக்கான ஹஜ் புனித யாத்திரை மானியம் ரத்து

    சென்னை : ஹஜ் யாத்திரை செல்லும் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை மத்திய அரசு திட்டமிட்டு ரத்து செய்துள்ளது என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

    இஸ்லாமியர்களின் புனித யாத்திரையான ஹஜ் பயணத்திற்கு வழங்கப்பட்டு வந்த மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, ரத்து செய்யப்பட்ட மானியம் முஸ்லீம்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும் என கூறி இருந்தார்.

    மத்திய அரசின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

     பாஜக அரசின் திட்டமிட்ட சதி

    பாஜக அரசின் திட்டமிட்ட சதி

    அதில், ஏழை,எளிய, நடுத்தர மக்களுக்கான மானியங்கள் பலவற்றை ஏதேனுமொரு சாக்குபோக்கு சொல்லி, சிறிது சிறிதாக ரத்து செய்துவரும் மத்திய பாஜக அரசு, தற்போது ஹஜ் பயணிகளுக்கான பயண மானியத்தையும் ரத்து செய்துள்ள பிற்போக்கு நடவடிக்கைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் கண்டிக்கிறது.

     ஹஜ் மானியம் சட்டபூர்வமானது

    ஹஜ் மானியம் சட்டபூர்வமானது

    உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்த ப்தாப் ஆலம் மற்றும் ரஞ்சன்பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஹஜ் பயணத்திற்கான மானியம் படிப்படியாக ரத்து செய்யவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்த அதே நேரத்தில், அரசியல் சட்டத்தின்படி ஹஜ் மானியம் சட்டபூர்வமானது என்றும் கூறியிருந்ததை மத்திய பா.ஜ.க. அரசு, வசதியாக மறந்துவிட்டதை இந்த நேரத்தில் திமுக சுட்டிக்காட்ட விரும்புகின்றது.

     உச்சநீதிமன்றத்தை மீறிய செயல்

    உச்சநீதிமன்றத்தை மீறிய செயல்

    தமிழக விவசாயிகளின் நலன்சார்ந்த காவேரி மேலாண்மை வாரியம், நாட்டுமக்களின் நலன்சார்ந்த ஆதார் உள்ளிட்ட வழக்குகளில், உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகளை அமல்படுத்துவதில் முரண்பாடு கொண்டு, அமைதிகாக்கும் மத்திய பாஜக அரசு, ஹஜ் மானியத்தை ரத்து செய்வதில் மட்டும் இத்தனை தீவிரமாக, விரைந்து நடவடிக்கைகள் எடுத்திருப்பது உள்நோக்கம் நிறைந்தது மட்டுமல்ல, ‘மானியம் அரசியல் சட்டபூர்வமானது' என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியதை மீறிய செயல் .

     பாஜக அரசின் வெற்று வாக்குறுதிகள்

    பாஜக அரசின் வெற்று வாக்குறுதிகள்

    "வளர்ச்சி, கூட்டுறவு கூட்டாட்சி, ஊழல் ஒழிப்பு", என்று மக்களிடம் பல வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த மத்திய பாஜக அரசு, இன்றைக்கு ஹஜ் பயணத்திற்கான மானியம் ரத்து போன்ற நடவடிக்கைகளை எடுத்து, நாட்டை "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற பாதையிலிருந்து பின்னடைவை உண்டாக்கும் வேறு திசையில் அழைத்துச் செல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். ஆகவே, ஹஜ் பயணிகளுக்கு மானியம் ரத்து என்ற அறிவிப்பை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    English summary
    DMK Leader MK Stalin condemns for ending Haj subsidy to Muslim People. He also slams that the ending subsidy for Haj is a Planed move by the BJP Government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X