For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பா.ம.க.-வின் வரைவு தேர்தல் அறிக்கையை திமுக காப்பியடிக்கிறது... அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

சென்னை : அண்மையில் வெளியிடப்பட்ட பா.ம.க.வின் வரைவு தேர்தல் அறிக்கையை தி.மு.க காப்பியடிப்பதாக, அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

பா.ம.க.வின் சட்டப்பேரவை வரைவு தேர்தல் அறிக்கை தொடர்பான பயிற்சிக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

anbumani

அண்மையில் பா.ம.க. சார்பில் வெளியிடப்பட்ட வரைவு தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்தும், அதை மக்களிடம் எடுத்துச் செல்வது பற்றியும் நிர்வாகிகளுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தமிழகத்தில் இதுவரை ஆட்சி செய்த கட்சிகள், தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியில் 70 சதவிகிதத்தை நிறைவேற்றவில்லை என்று புகார் கூறினார்.

பா.ம.க ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் கடைக்கோடியில் வசிப்பவருக்கும் கல்வி உறுதி செய்யப்படும் என்று ராமதாஸ் உறுதியளித்தார். நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி ராமதாஸ், பா.ம.க.வின் வரைவு தேர்தல் அறிக்கையை, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் காப்பியடிப்பதாக குற்றம்சாட்டினார்.

பா.ம.க ஆட்சிக்கு வந்தால், 15 நாட்களுக்கு ஒரு முறை அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்றும், 60 வயது மேற்பட்டவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

English summary
DMK make copy of PMK's draft election manifesto- said anbumani
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X