For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழ்நாட்டில் பாலியல் வன்முறை குற்றங்கள் அதிகரிப்பு: ஸ்டாலின் குற்றச்சாட்டு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் பாலியல் வன்முறைக்குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று மு.க.ஸ்டாலின் (தி.மு.க.) ஒரு பிரச்சனை குறித்து பேச சபாநாயகரிடம் அனுமதி கேட்டார். ஆனால் சபாநாயகர் அது எனது ஆய்வில் உள்ளது என்றார். ஆனாலும் தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அனைவரும் எழுந்து நின்று மு.க.ஸ்டாலினுக்கு பேச வாய்ப்பு வழங்கும்படி கேட்டனர். ஆனால் பேச அனுமதி கிடைக்கவில்லை.

இதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்து வெளி நடப்பு செய்தனர்.

DMK members stage walkout

சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின்,

''தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட மின்சார திட்டங்களை அ.தி.மு.க. தொடங்கியதாக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறுகிறார்.

மேலும், மின்சார திட்டங்கள் பற்றி சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. மின்சாரம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டது.

பேரவையில் ஒரு அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து பேச சபாநாயகரிடம் அனுமதி கேட்ட போது அனுமதி கிடைக்கவில்லை.
2 ஆங்கில பத்திரிகைகளில் வந்த புள்ளி விவரப்படி நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் குறித்து பேச இருந்தோம்.

அதில் தமிழ்நாட்டில் பாலியல் வன்முறை குற்றங்கள் 2013-ல் 7,475 என்றும், 2012-ம் ஆண்டில் 7,192 என்றும் தெரிவிக்கிறது. இதே போல பலாத்கார சம்பவங்களின் புள்ளி விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 2013-ம் ஆண்டில் 992 பலாத்கார வழக்குகளும், 2012-ல் 737 சம்பவங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முக்கியமான பிரச்சினை என்பதால் இது குறித்து பேச முற்பட்டோம்.

அது மட்டுமல்ல. ஞாயிறன்று போலீஸ் ஏட்டு ஒருவர் மணல் கடத்தலை தடுத்த போது டிராக்டர் ஏற்றி கொல்லப்பட்டார். சமீபத்தில் மத்திய அரசு சமஸ்கிருத வாரம் கடைபிடிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியது குறித்தும் பேச முடிவு செய்தோம்.

இது பற்றி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அனுமதி கேட்டு இருந்தோம். இது பற்றி பேச வாய்ப்பு கிடைக்காததால் வெளிநடப்பு செய்தோம்.

இதே போல் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேச வாய்ப்பு கேட்டார். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்கவில்லை.

‘‘கடைசி நேரத்தில் நீங்கள் அனுமதி கேட்டால் எப்படி என்று சபாநாயகர் வினவினார். மற்ற கட்சி உறுப்பினர்கள் முன்பே எழுதி கொடுத்து அனுமதி கேட்டு இருந்தனர். நீங்கள் கடைசி நேரத்தில் தந்ததால் இப்போது பேச வாய்ப்பு இல்லை'' என்றார். இதை தொடர்ந்து டாக்டர் கிருஷ்ணசாமியும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

English summary
DMK members staged a walkout from the Assembly on Monday, protesting against Speaker P. Dhanapal’s decision not to allow Stalin to respond to Chief Minister Jayalalithaa’s observation on powercut issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X