For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர்: கருப்பு சட்டை அணிந்து திமுகவினர் வருகை

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு கருப்பு சட்டை அணிந்தபடி திமுகவினர் சட்டசபைக்கு வருகை தந்துள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக பட்ஜெட் 2018-19, திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு- வீடியோ

    சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு கருப்பு சட்டை அணிந்தபடி திமுகவினர் சட்டசபைக்கு வருகை தந்தனர்.

    2018-19-ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார். இதை தொடர்ந்து கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்தும் துறை வாரியான மானியக் கோரிக்கைகளை எந்தெந்த நாட்களில் தாக்கல் செய்வது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும்.

    DMK MLAs wears black shirt oppposing Central Government

    இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு திமுகவினர் கருப்பு சட்டையில் வந்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசு தாமதம் செய்வதற்கு கருப்பு சட்டையில் திமுகவினர் வருகை தந்துள்ளனர்.

    பெரும்பான்மை இல்லாத அதிமுக அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் திமுகவினர் கருப்பு சட்டை அணிந்தபடி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அவற்றை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டவில்லை என்பதே குற்றச்சாட்டாக உள்ளது.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    DMK MLAs wears black shirt for opposing Central Government which does not set up Cauvery Management board.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X