For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

படம் தப்பு.. மன்னிச்சிருங்க.. இனிமேல் கவனமா இருப்பேன்.. திமுக எம்பி செந்தில்குமார் அதிரடி டிவீட்

Google Oneindia Tamil News

சென்னை: சிஏஏ போராட்டத்தால் ஒருவர் காயமடைந்துள்ளார் என நான் பதிவு செய்த புகைப்படம் சாலை விபத்து குறித்த படம் என பலர் கூறுவதால் அதற்கான நான் வருத்தப்படுகிறேன். இனி இது போன்ற புகைப்படங்களை ட்விட்டரில் போடும் போது கவனத்துடன் செயல்படுகிறேன் என திமுக எம்பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றிற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதையடுத்து சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று முன் தினம் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தின.

யாரு ராசா நீ.. இந்த போடு போடுறானே.. என்னா ஒரு அடி.. நல்லா படிடா தம்பி.. நாட்டுக்கே தலைவனாகலாம்! யாரு ராசா நீ.. இந்த போடு போடுறானே.. என்னா ஒரு அடி.. நல்லா படிடா தம்பி.. நாட்டுக்கே தலைவனாகலாம்!

கல் எறிந்தது

கல் எறிந்தது

அப்போது போலீஸார் அவர்களை கலைந்து போக கூறினர். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. அப்போது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் ஏராளமானோர் காயமடைந்தனர். பதிலுக்கு போலீஸார் மீது போராட்டக்காரர்களும் கல் எறிந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மூன்றாவது நாள்

மூன்றாவது நாள்

இதை கண்டித்து சென்னை வண்ணாரப்பேட்டை, பிராட்வே, அண்ணா சாலை, தமிழகத்தின் மதுரை, விழுப்புரம், திருச்சி, நாகை, தேனி, ராமநாதபுரம், கரூர், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் திரளான முஸ்லீம்கள் கலந்து கொண்டு தடியடியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

நிலைமைக்கு காரணம்

நிலைமைக்கு காரணம்

இதனிடையே சிஏஏ போராட்டத்தில் நடந்த மோதலில் ஒருவர் ரத்தக் காயங்களுடன் இருப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் போட்ட திமுக எம் பி செந்தில்குமார் இதற்கு காரணமான அதிமுக அரசும் ராமதாஸும் பதில் சொல்லியே ஆக வேண்டும். பாஜக அமல்படுத்திய சிஏஏவுக்கு நீங்கள் அளித்த ஆதரவு வாக்கின் விளைவுதான் இன்று தமிழகம் சந்திக்கும் இந்த நிலைமைக்கு காரணம் என தெரிவித்திருந்தார்.

படம் தப்பு

இந்த நிலையில் இந்த படத்தில் உள்ள நபர் சிஏஏ போராட்டத்தில் காயமடைந்தவர் அல்ல. சாலை விபத்தில் காயமடைந்தவர் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து திமுக எம்பி செந்தில் குமார் மீண்டும் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் நான் எனது பதிவில் வெளியிட்ட நபர் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் காயமடைந்தவர் இல்லை என்றும் அவர் சாலை விபத்தில் காயமடைந்தவர் என்றும் நண்பர்கள் சிலர் எனக்கு தெரிவித்தனர். ஒரு வேளை நான் பதிவு செய்ய புகைப்படம் தவறு என்றால் அதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன். இனி ஆதாரப்பூர்வமற்ற தகவல்களை ட்விட்டரில் பதிவு செய்வதற்கு முன்னர் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து கவனத்துடன் செயல்படுவேன் என தெரிவித்தார்.

English summary
DMK MP Senthil Kumar says that If a photo of the person I published is not from anti CAA protests but from a Road traffic accident as pointed out by few friends and well wishers., I sincerely apologize and will be double more careful in posting pictures from unauthorized sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X