For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு குட்டி கதை சொல்றேன்.. விஜய் ஸ்டைலில் ரஜினி, ராமதாஸை கலாய்த்த எம்பி செந்தில் குமார்.. செம!

திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார், ஒரு குட்டி கதை சொல்லட்டுமா என்று நடிகர் ரஜினிகாந்தையும், பாமக நிறுவனர் டாக்டர் அன்புமணி ராமதாஸையும் கிண்டல் செய்து இருப்பது பெரிய வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பாமக - ரஜினி கூட்டணியின் பின்னணி இதுதான் | Rajinikanth lead alliance will target to DMK

    சென்னை: திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார், ஒரு குட்டி கதை சொல்லட்டுமா என்று நடிகர் ரஜினிகாந்தையும், பாமக நிறுவனர் டாக்டர் அன்புமணி ராமதாஸையும் கிண்டல் செய்து இருப்பது பெரிய வைரலாகி உள்ளது.

    வருமான வரி சோதனைக்கு பின் தமிழக அரசியலில் நடிகர் விஜய் முக்கியமான நபராக மாறியுள்ளார். நடிகர் விஜயை பாஜக நேரடியாக எதிர்க்க தொடங்கி உள்ளது. அதே போல் நடிகர் விஜய் திமுக எம்பிக்கள் ஆதரித்து பேசி வருகிறார்கள்.

    இந்த நிலையில்தான் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் சிங்கிள் பாடலுக்கு 'ஒரு குட்டி கதை' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் போஸ்டர் இன்று வெளியானது. அதனால் இந்த பாடலில் பெரும்பாலும் அரசியல் சார்ந்த கருத்துக்கள் இருக்கும் என்று கூறுகிறார்கள். விஜயின் அரசியல் திட்டங்களை சொல்லும் வகையிலும் சிலரை கலாய்க்கும் வகையிலும் இந்த பாடல் இருக்கும் என்கிறார்கள்.

    ஷீலா தீட்சித் இருந்தால் இப்படி ஆகி இருக்குமா? 63 இடத்தில் நினைத்து பார்க்காத ஷாக்.. சோனியா அதிர்ச்சிஷீலா தீட்சித் இருந்தால் இப்படி ஆகி இருக்குமா? 63 இடத்தில் நினைத்து பார்க்காத ஷாக்.. சோனியா அதிர்ச்சி

    என்ன டிவிட்

    இந்த நிலையில் திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் இதை வைத்து ஒரு டிவிட் செய்துள்ளார். அவர் தனது டிவிட்டில், ஒரு குட்டி உண்மை கதை சொல்லட்டுமா ரஜினிகாந்த் மற்றும் ராமதாஸ். 2021ல் தமிழ்நாட்டில் இரண்டு பேர் மிக பெரிய அவமானமான தோல்வியே சந்திக்க போறாங்க. இந்த அவமரியாதையை உங்களுக்கு அளிக்க போவது அர்ஜுனன் கிருஷ்ணர் என்று நீங்கள் நம்பும் இருவர்தான்.டெல்லியில் செய்ததை விட மிக சிறப்பாக செய்வார்கள், என்று செந்தில் குமார் தனது டிவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.

    விஜய் மாஸ்டர்

    விஜய் மாஸ்டர்

    விஜய் மாஸ்டர் படத்தின் பாடல் டைட்டிலை வைத்தே ராமதாஸ், ரஜினி இருவரையும் செந்தில் குமார் கலாய்த்து இருக்கிறார். விஜயை சமீப காலமாக ரஜினி ரசிகர்கள் எதிர்த்து வருகிறார்கள். வருமான வரி பிரச்சனைக்கு பின் இந்த எதிர்ப்பு அதிகம் ஆகியுள்ளது. விஜய் எடுத்த செல்பி கூட ரஜினிக்கு பதிலடிதான் என்று சிலர் கூறி வருகிறார்கள். இதனால் சமூக வலைத்தளங்களில் யார் சூப்பர் ஸ்டார் என்று விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    விஜய் பாடல்

    விஜய் பாடல்

    இந்த நிலையில்தான் விஜய் பட பாடலை வைத்தே, அதிலும் விஜய் அதிகமாக பயன்படுத்தும் ஒரு குட்டி கதை என்ற வார்த்தையையே வைத்தே ரஜினியை கலாய்த்து இருப்பது பெரிய வைரலாகி உள்ளது. முன்னதாக ரஜினி குறித்தும் ராமதாஸ் குறித்தும் செந்தில் குமார் இதேபோல் சிறப்பாக வம்பிழுத்து இருந்தார். அதில், ஐயா ராமதாஸ், எனக்கு ஒரு டவுட்டு., அப்போ டீ கடை ஓனர் நீங்க இல்லையா 😉.

    யார்?

    யார்?

    உங்க கூட்டணி கட்சி முதல்அமைச்சர் 😜 வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் அல்லது ரஜினிகாந்தா என்பது கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் ஐயா. நம்ப பூத்ல இருக்க பசங்க கொழம்பி போய் இருக்காங்க.😊 என்று கிண்டலாக குறிப்பிட்டு இருந்தார். அவரின் இந்த டிவிட்டும் பெரிய வைரலானது குறிப்பிடத்தக்கது.

    English summary
    DMK MP Senthilkumar trolls Ramadoss and Rajinikanth with Vijay reference in Twitter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X