For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சரியில்லையே.. மொத்தமாக மோடியை போய் சந்தித்த திமுக எம்பிக்கள்.. அரசகுமார் பேச்சுக்கு இதுதான் காரணமா?

திமுக எம்பிக்கள் இன்று பிரதமர் மோடியை மொத்தமாக சென்று சந்தித்ததற்கு பின் நிறைய அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டாலினை புகழ்ந்த அரசகுமார்.. பாஜகவின் திட்டம் என்ன?

    சென்னை: திமுக எம்பிக்கள் இன்று பிரதமர் மோடியை மொத்தமாக சென்று சந்தித்ததற்கு பின் நிறைய அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் இதற்கு பின் நிறைய திட்டங்களை வகுத்து வருகிறார் என்றும் கூறுகிறார்கள்.

    நாடு முழுக்க பாஜக கட்சி வேகமாக வளர்ந்து வருகிறது. மத்தியில் ஆட்சியில் இருப்பது போலவே பாஜக கூட்டணி பல மாநிலங்களில் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது.

    அதே சமயம் இன்னொரு பக்கம் திமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட மாநில கட்சிகள் திமுகவிற்கு பெரிய அளவில் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறது. முக்கியமாக திமுக பாஜகவிற்கு தமிழகத்தில் மட்டுமின்றி தேசிய அளவிலும் பெரிய போட்டியாக உள்ளது.

    என்ன சொல்கிறார்

    என்ன சொல்கிறார்

    ஆனாலும் இன்னொரு பக்கம் தமிழக பாஜக தலைவர்கள் அவ்வப்போது திமுகவுடன் நெருக்கமாக பேசி வருகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று பாஜகவின் மாநில துணை தலைவர் அரசகுமார் குறிப்பிட்டார். எனக்கு திமுக கரைவேட்டி கொடுங்கள் என்றும் அவர் வெளிப்படையாக குறிப்பிட்டார்.

    முன்பே

    முன்பே

    இதற்கு முன்பே பாஜகவின் மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்னன், திமுக தலைவர் ஸ்டாலின் நன்றாக உழைக்க கூடியவர். அவரின் உழைப்பு எங்களை வியக்க வைக்கிறது. அவர் மிகவும் திறமையான அரசியல்வாதி என்று குறிப்பிட்டார். இப்படி வரிசையாக பாஜக தலைவர்கள் ஒரு பக்கம் ஸ்டாலினை புகழ்ந்து வருகிறார்கள்.

    என்ன சந்திப்பு

    என்ன சந்திப்பு

    இந்த நிலையில்தான் தற்போது திமுக எம்பிக்கள் பிரதமர் மோடியை நேரில் சென்று சந்தித்து இருக்கிறார்கள். திமுக எம்பி கனிமொழி, டிஆர் பாலு, ஆ. ராசா உள்ளிட்ட முக்கிய எம்பிக்கள் இந்த சந்திப்பில் இருந்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த கடிதம் ஒன்றையும் அவர்கள் மோடியிடம் கொடுத்தனர்.

    என்ன பேசினார்கள்

    என்ன பேசினார்கள்

    தமிழக பிரச்சனை, நீட் தேர்வு குறித்து இவர்கள் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் இதற்கு பின் வேறு அரசியல் காரணங்கள் இருக்கலாம். 2021 சட்டசபை தேர்தலுக்கு திமுக புதிய கூட்டணி கூட அமைக்கலாம். அதற்கான முன்னோட்டமாக இது இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

    வாய்ப்புள்ளது

    வாய்ப்புள்ளது

    லோக்சபா தேர்தலில் வந்த முடிவுகள் பாஜகவிற்கு பிடிக்கவில்லை. திமுகவின் வளர்ச்சி பாஜகவை கவர்ந்துள்ளது. இதனால் உள்ளாட்சி தேர்தல் வரை மட்டுமே பாஜக பொறுமையாக இருக்கும். இல்லையென்றால் உள்ளாட்சி தேர்தலுக்கு பின் பாஜக கூட்டணி மாற வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    இதுதான் காரணம்

    இதுதான் காரணம்

    திமுகவை பாஜக கண்டிப்பாக எதிர்காலத்தில் தன் பக்கம் இழுக்க முயற்சி செய்யும் என்றும் கூறுகிறார்கள். திமுகவை பாஜக தலைவர்கள் திடீர் என்று புகழ்வதும், பிரதமர் மோடியை திமுக எம்பிக்கள் நேரில் சென்று பார்ப்பதும் இதனால்தான் என்றும் கூறுகிறார்கள். இந்த திடீர் திடீர் திருப்பங்கள் அதிமுக தலைவர்கள் பல சந்தேகங்களுக்கு உள்ளாக்கி உள்ளது.

    English summary
    DMK MPs meeting with PM Modi raises few questions on BJP's future alliance in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X