For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

100 வயது வாழ விருப்பமில்லை... ஆனாலும் திமுகவை காக்க இன்னும் 10 ஆண்டுகள் வாழ ஆசை: கருணாநிதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நானும், அன்பழகனும், 90 வயதை கடந்து விட்டோம். நுாறு வயது வரை வாழ விரும்பினால், அது உங்களையும், எங்களையும் ஏமாற்றுவதாக இருக்கும். எனினும், நானும், அன்பழகனும் இன்னும், 10, 15 ஆண்டுகள் வாழ்வோம். அதுவரை, தி.மு.க.,வை இளைஞர்கள், மாணவர்கள், தொண்டர்கள் கட்டிக் காக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள், திமுக தொடங்கிய நாள் ஆகியவற்றை முப்பெரும் விழாவாக ஒவ்வொரு ஆண்டும் திமுக கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் அண்ணாவின் புகழ் நிலைத்து நிற்கும். திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் காரணமானவர் அண்ணா.

திராவிய இயக்கத்திற்கு ஆபத்து

திராவிய இயக்கத்திற்கு ஆபத்து

திராவிட இயக்கத்தின் எழுச்சி பற்றியும், திராவிட இயக்கத்தை சூழ்ந்துள்ள ஆபத்தை பற்றியும், நானும், அன்பழகனும் முரசொலியில் கட்டுரை எழுதியுள்ளோம். அதனை அனைவரும் படிக்க வேண்டும்.

சட்டசபைத் தேர்தல்

சட்டசபைத் தேர்தல்

இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. எப்படியாவது மாயா ஜாலங்களை செய்து மீண்டும் ஆட்சியை பிடிக்க ஆளுங் கட்சி திட்டமிடுகிறது. இதை யெல்லாம் மக்களிடம் எடுத்துச் சென்று, வரும் தேர்தலில் திமுகவுக்கு வெற்றியை பெற்றுத்தர வேண்டும்.

உடைக்க முடியாது

உடைக்க முடியாது

திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது. அப்படி உடைக்க நினைப்பவர்கள் உடைந்து போவார்கள். எந்த புயலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. எந்த புயலையும் தாங்கும் ஆற்றல் திமுகவுக்கு உண்டு. நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வோம். அந்த திறமையும், வீரமும் திமுகவுக்கு உள்ளது.

நூறாண்டு வாழ ஆசை

நூறாண்டு வாழ ஆசை

நானும், பொதுச்செயலாளர் க.அன்பழகனும் 90 வயதை தாண்டிவிட்டோம். இன்னும் 10,15 ஆண்டுகளே நாங்கள் இருப்போம். பெரியாரும், அண்ணாவும், நாங் களும் உருவாக்கிய திராவிட இயக்கத்தை இளைஞர்களா கிய நீங்கள் கட்டிக் காக்க வேண்டும் என்று கருணாநிதி பேசினார்.

முப்பெரும் விழா விருதுகள்

முப்பெரும் விழா விருதுகள்

இந்த விழாவில் . எஸ்.சிவசுப்பிரமணியத்துக்கு பெரியார் விருது, பெங்களூரு வி.தேவராசனுக்கு அண்ணா விருது, பவானி ராஜேந் திரனுக்கு பாவேந்தர் விருது, கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு கலைஞர் விருதுகளை கருணாநிதி வழங்கினார். மேல்நிலைப் பள்ளித் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு திமுக அறக்கட்டளை சார்பில் தலா ரூ.10 ஆயிரம் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முரசொலி அறக்கட்டளை சார்பில் பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், நேர்மையான ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டன. விருது பெற்ற வர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் பண முடிப்பு வழங்கப்பட்டன.

English summary
Mupperum Vizha is an important event in the history of the DMK party. The DMK party President Kalaignar Karunanidhi and other senior leaders of the party also graced the function with their presence. Certificates and cash awards were distributed as a mark of appreciation to the top scorers in the 10th and 12th standard examinations and winners.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X