For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டாலின் கைதான நிலையிலும் தடையை மீறி திமுகவினர் மனித சங்கிலிப் போராட்டம் - வீடியோ

தமிழக அரசு அனுமதியளிக்காத போதும் சென்னை உள்பட தமிழகமெங்கும் நேற்று திமுகவினர் நீட் தேர்வுக்கு மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு விதித்திருந்த தடையை மீறி நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி திமுகவினர் நேற்று தமிழகம் எங்கும் மனித சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தும் என திமுக தலைமை கழகத்திலிருந்து முன்பே அறிவிப்பு வெளியிடப்படிருந்தது.

Recommended Video

    DMK Cadres hold human chain protest against NEET-Oneindia Tamil

    ஆனால், தமிழக அரசு அதற்கு அனுமதி தர மறுத்துவிட்டது. மேலும் தடையை மீறி நேற்று கோவையில் இருந்து சேலம் சென்று போராட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினையும் போலீசார் கைது செய்தனர்.

    அதனால் சேலம் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களும் கைது செய்யப்பட்டனர். ஒருபுறம் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தாலும், மற்றொருபுரம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் திட்டமிட்டபடி மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.

    அதில் கூட்டணிக் கட்சியினரும் கலந்துகொண்டனர். தடையை மீறி நடத்தப்பட்ட மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

    English summary
    DMk cadres organized human chain protest Tamilnadu and they were arrested. Later they were released.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X