For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக உள்ளிட்ட 9 கட்சிகளின் தலைவர்கள் கமல் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.. ஸ்டாலின் அதிரடி!

திமுக உள்ளிட்ட 9 கட்சிகளின் தலைவர்கள் கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கமல் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.. ஸ்டாலின்-வீடியோ

    சென்னை: திமுக உள்ளிட்ட 9 கட்சிகளின் தலைவர்கள் கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பங்கேற்கும் அனைத்துக்கட்சி கூட்டம் நாளை நடைபெறும் என அறிவித்திருந்தார்.

    ஆனால் கமல் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க நல்லக்கண்ணு ஒப்புக்கொள்ளவில்லை என முத்தரசன் கூறியிருந்தார். மேலும் நல்லக்கண்ணும் இந்த கூட்டத்தில் பங்கேற்போவதில்லை என்றார்.

    கமல் கூட்டத்தில் பங்கேற்பீர்களா?

    கமல் கூட்டத்தில் பங்கேற்பீர்களா?

    இந்நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் திமுக தலைமையில் நடைபெறவிருந்த அனைத்து கட்சி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ள நிலையில், 19-ந் தேதி (நாளை) கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    ஸ்டாலின் பதில்

    ஸ்டாலின் பதில்

    அதற்கு பதிலளித்த ஸ்டாலின், தி.மு.க. தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டிருந்தாலும், அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன் நான் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசியபோது, கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய தேவையில்லை என்று அனைவரும் தெரிவித்து இருக்கின்றனர்.

    பங்கேற்க மாட்டோம்

    பங்கேற்க மாட்டோம்

    எனவே, தி.மு.க. உள்ளிட்ட 9 கட்சிகளும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறோம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

    திமுக கூட்டம் ஒத்திவைப்பு

    திமுக கூட்டம் ஒத்திவைப்பு

    முன்னதாக திமுக சார்பில் காவிரி விவகாரம் தொடர்பாக நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் அந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    DMK working president Stalin says DMK and othe 9 parties will not participate in the Kamal's all party meeting.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X