For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலைவரானார் ஸ்டாலின்.. குத்தாட்டம், ஆட்டம் பாட்டம்.. திமுக தொண்டர்கள் உற்சாகம்!

தொண்டர்கள் தமிழகம் முழுவதும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தலைவரானார் ஸ்டாலின்...தொண்டர்கள் கொண்டாட்டம்!- வீடியோ

    சென்னை: திமுக தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதை அடுத்து தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

    காலைமுதலே அறிவாலயத்தின் வாசலில் திரண்டிருந்தனர் தொண்டர்கள். "திமுக தலைவர் ஸ்டாலின்" என்று அன்பழகன் அறிவித்த அடுத்த கணமே அறிவாலயத்தின் வாசலில் ஒரே பட்டாசு சத்தம்தான்.

    அதிர செய்த முழக்கங்கள்

    அதிர செய்த முழக்கங்கள்

    தொண்டர்களின் கரகோஷம் அறிவாலயத்தையே அதிர செய்தது. வாழ்த்து முழக்கங்களை தொண்டர்கள் உற்சாகத்துடன் எழுப்பி வருகின்றனர். இதில் தங்கள் செயல்தலைவர், "தலைவர்" பதவிக்கு உயர்ந்துவிட்டார் என்ற சந்தோஷத்தில் தொண்டர்கள் குத்தாட்டம் போடவே ஆரம்பித்துவிட்டனர்.

    குத்தாட்ட கலாச்சாரம்

    குத்தாட்ட கலாச்சாரம்

    பெரும்பாலும் இதுபோன்ற குத்தாட்டம் அதிமுகவிலேதான் ரொம்ப பிரபலம். அதுவும் பெண் தொண்டர்கள்தான் சேலையை இழுத்துக் கட்டிக் கொண்டு ஆடுவார்கள். ஆனால் தற்போது திமுகவிலே இந்த குத்தாட்ட கலாச்சாரம் தொடங்கியுள்ளது.

    அபரிமிதமான பாசமே

    அபரிமிதமான பாசமே

    தங்கள் மனதில் உள்ள எக்கச்சக்க மகிழ்ச்சியை தொண்டர்கள் வெளிப்படுத்தும் பாங்கும் எதுவானால் என்ன? எல்லாமே தங்களது கட்சியின்மீதும், அக்கட்சி தலைவன்மீதும் உள்ள அபரிமிதமான பாசமே! ஸ்டாலினின் புதிய பதவி அறிவிப்பினால் தமிழக மாவட்டங்களிலும் திமுக தொண்டர்கள் உற்சாகமாக உள்ளனர்.

    நிறைவேறியது ஆசை

    நிறைவேறியது ஆசை

    திமுக தொண்டர்கள் குவியும் பகுதிகளில் எல்லாம் இனிப்புகள் பரிமாறப்பட்டு கொள்ளப்பட்டு வருகின்றன. பட்டாசுகள் இடைவிடாமல் பட்டைய கிளப்பி வெடிக்கப்பட்டு வருகின்றன. நீண்ட கால ஆசை தற்போது நிறைவேறிய உணர்வு ஒவ்வொரு திமுக தொண்டரின் முகத்திலும் நிரம்பி வருகிறது!

    English summary
    DMK Party members outside Arivalayam are very happy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X