For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆளுநர் பன்வாரிலால் ஆய்வுக்கு எதிர்ப்பு... தருமபுரியில் திமுகவினர் கருப்புக்கொடி போராட்டம்

தருமபுரியில் ஆளுநர் பன்வாரிலாலின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

By Dakshinamurthy
Google Oneindia Tamil News

தருமபுரி: மத்திய அரசின் தூய்மை பாரதம் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தருமபுரியில் ஆய்வு செய்த ஆளுநர் பன்வாரிலாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி ஏற்றதில் இருந்து மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் சென்று அதிரடியாக ஆய்வுமேற்கொண்டு வருகிறார். ஆளுநரின் நடவடிக்கைக்கு தி.மு.க உள்ளிட்டஎதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அரசியலமைப்பு சட்டத்தை மீறி ஆய்வு மேற்கொள்ளும்ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டும் போராட்டங்கள் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

DMK party members protest against governor for inspection

இதையெல்லாம் கண்டுக்கொள்ளாத ஆளுநர்பன்வாரிலால் இன்று தர்மபுரி மாவட்டத்தில் ஆய்வு நடத்தினார். தர்மபுரிமாவட்டம் கக்கன்ஜிபுரம் பகுதியில் அவர் தூய்மை இந்தியாதிட்டப் பணிகளை ஆய்வு செய்தார். மேலும், அந்தப் பகுதியில் கட்டப்பட்டுள்ளதனிநபர் கழிப்பறைகளையும் அவர் ஆய்வு செய்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த திமுகவினர் ஆளுநர் செல்லும் வழி எங்கும் கருப்பு கொடியை ஏந்தி ஆர்ப்பாட்டம்நடத்தினர். இதனால், தர்மபுரி பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் மிகக்கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. ஆளுநர் எங்கு சென்றாலும் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் திமுக தலைமை முன்பே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
DMK party members protest against governor Banwarilal for inspecting in against the constitution. As the party members gathered on the both side of roads and showed black flag to Governor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X