For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக சகோதரர்களால் வேட்டையாடப்பட்ட சசிகலா.. சிபிஐ விசாரணை கேட்கும் தாயார்.. கோர்ட்டில் அதிரடி வழக்கு

சசிகலா தற்கொலை குறித்து ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

செங்கல்பட்டு: சசிகலா என்ற இளம்பெண்ணை, திமுக பிரமுகரும், அவரது சகோதரரும் சேர்ந்து 4 வருஷமாக மிரட்டி மிரட்டியே சீரழித்த நிலையில், இந்த விவகாரம் தற்போது கோர்ட் வரை சென்றிருக்கிறது.. இந்த மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், திமுக சகோதரர்களுக்கு பிடி இறுகும் என்றே தெரிகிறது!

கடந்த சில தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டு சம்பவம் தமிழகத்தை உலுக்கி எடுத்துவிட்டது.. செய்யூரை அடுத்த நைனார் குப்பத்தை சேர்ந்த சசிகலா என்பவர், கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஃபேக்டரியில் வேலை பார்த்து வந்தார்.

தற்போது லாக்டவுனில் கம்பெனி மூடப்பட்டுள்ளதால், வீட்டில்தான் இருந்தார்.. இந்நிலையில், கடந்த 24-ந்தேதி அவரது சசிகலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. செய்யூர் போலீசாரும் விசாரணையை ஆரம்பித்தனர். ஆனால், தங்கையின் சாவில் மர்மம் உள்ளதாக அவரது சகோதரர் அருண்பாபு செய்யூர் ஸ்டேஷனில் புகார் தந்தார்.

போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம்

அத்துடன், தனது பெரியப்பா மகன்களான புருஷோத்தமன், தேவேந்திரன் ஆகியோர்தான் இந்த சாவுக்கு காரணம், சசிகலா சடலத்தை தோண்டி இன்னொரு முறை போஸ்ட் மார்ட்டம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து சுடுகாட்டிலேயே உட்கார்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டார். அப்போதுதான் இந்த விவகாரம் வெடித்து கிளம்ப தொடங்கியது.

சசிகலா

சசிகலா

புகாருக்கு உள்ளானவர்கள் திமுக இளைஞரணி செயலாளர் தேவேந்திரனும், அவரது சகோதரர் புருஷோத்தமன் என்பவரும்தான்.. இவர்கள் சசிகலாவை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.. சசிகலா குளிக்கும்போது அதை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டு மிரட்டியும் வந்துள்ளனர்.

தற்கொலை

தற்கொலை

4 வருடமாக இந்த நகர வேதனையில் சசிகலா தவித்து வந்துள்ளார். வீட்டில் தனக்கு நடக்க இருக்கும் கல்யாணத்தையும் அண்ணன்-தம்பி தடுத்து வந்துள்ளனர்.. தன்னை கடைசிவரை நிம்மதியாக வாழ விடாத நிலையில், மனமுடைந்த சசிகலா தூக்கு போட்டு தொங்கியே விட்டார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

திமுக

திமுக

இதனிடையே, சசிகலாவின் மரணம் தொடர்பாக புருஷோத்தமன் போலீசில் சரணடைந்தார்.. ஆனால், கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட அவரது சகோதரரும், திமுக இளைஞரணி செயலாளருமான தேவேந்திரன் தலைமறைவாகவே இருந்தார் என்றும் சொல்லப்பட்டது.. இந்நிலையில், இந்த தற்கொலை விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது. சசிகலா மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அவரது தாயார் சந்திரா சென்னை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நிர்வாண வீடியோ

நிர்வாண வீடியோ

"நிர்வாண வீடியோ எடுத்தது, பாலியல் தொல்லை கொடுத்து வன்கொடுமை செய்தது, மரணம் விளைவித்தது போன்ற பிரிவுகளிலோ, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு சட்டத்திலோ வழக்கு பதிவு செய்யாமல், தற்கொலைக்கு தூண்டிய பிரிவில் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட இருவரையும் வழக்கிலிருந்து தப்பிக்க வைக்கும் முயற்சி என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

விசாரணை

விசாரணை

அத்துடன், செய்யூர் காவல் நிலைய விசாரணையில் நம்பிக்கை இல்லை - என்று தெரிவித்துள்ளதுடன், இந்த மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.. இதனால் திமுக சகோதரர்களுக்கு பிடி இறுகும் என்றே தெரிகிறது!

English summary
dmk person: chengalpattu sasikala suicide case issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X