For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதி பிறந்த நாளில் அவரை பார்க்க வராமல் இருந்தால் அதுவே பரிசு... திமுக

ஜூன் 3ல் பிறந்தநாள் கொண்டாடும் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க யாரும் நேரில் வர வேண்டாம் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க யாரும் வர வேண்டாம் என்று அந்த கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

80 ஆண்டுகால அரசியல் வாழ்வில் ஓய்வின்றி தமிழ் இனத்திற்காக உழைத்தவர் திமுக தலைவர் கருணாநிதி. அண்மைக்காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு தற்போது உடல்நலம் தேறி வருகிறது.

DMK requests cadres not to meet their leader on his 94th birthday

இந்நிலையில் அவருக்கு மேலும் ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதோடு நோய் தொற்று ஏற்படாமல் இருக்கவும் கருணாநிதியை சந்திக்க அவரது பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி தொண்டர்கள் யாரும் நேரில் வர வேண்டாம்.

கருணாநிதியின் உடல்நலம் தேற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தலைவர் பிறந்தநாளில் அவரை சந்திக்காமல் தவிர்ப்பதே தொண்டர்கள் அளிக்கும் சிறப்பு பரிசு, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற ஜூன் 3ம் தேதி 94வது வயதில் அடியெடுத்து வைக்கும் திமுக தலைவர் சட்டப்பேரவையில் நுழைந்த 60 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி வைர விழா கொண்டாட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் கருணாநிதி பங்கேற்க மாட்டார் என்பதே தொண்டர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக அமைந்தது.

இந்நிலையில் பிறந்தநாளன்று அவரை சந்திக்க வேண்டாம் என்று அறிவித்துள்ள தொண்டர்களுக்கு மேலும் ஏமாற்றம் அளித்துள்ளது. ஒவ்வொரு பிறந்தநாளின் போது வீட்டு வாசலில் மரக்கன்று நடுவதையும், தம்மைத் தேடி வந்து ஆசி பெற்று செல்லும் தொண்டர்களுக்கு புதிய 10 ரூ நோட்டுகளை பரிசாக அளித்து மகிழ்விப்பார் கருணாநிதி, ஆனால் இந்த ஆண்டு இவை அனைத்துமே மிஸ்ஸிங் என்பத தான் வருத்தமளிக்கும் விஷயம்.

English summary
DMK working president says Karunanidhi's health condition is far better and so please avoid to meet him in person on his 94th birthday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X