For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'முட்டை' வாங்குவது திமுகவுக்கு புதிதல்ல.. இது 3வது முறை!

By Mathi
|

சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக 3வது முறையாக எந்த ஒரு இடத்திலும் வெல்ல முடியாமல் படுதோல்வியைத் தழுவியிருக்கிறது.

தற்போதைய லோக்சபா தேர்தலில் தமிழகம், புதுவையில் திமுக விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம்,, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றுடன் தேர்தலை எதிர்கொண்டது.

இதில் தமிழகத்தில் திமுக 35 மட்டும் தொகுதிகளில் போட்டியிட்டது. விடுதலை சிறுத்தைகள் 2 இடங்களிலும் புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு இடத்திலும் போட்டியிட்டன. புதுச்சேரியிலும் திமுக போட்டியிட்டது.

முட்டைதான்..

முட்டைதான்..

ஆனால் ஒரு இடத்தில் கூட திமுகவோ அதன் கூட்டணிகளோ வெற்றிபெற முடியாமல் தோல்வியைத் தழுவியுள்ளன. இப்படி லோக்சபா தேர்தலில் திமுக ஒரு இடத்திலும் கூட திமுக வெற்றி பெறாமல் போவது இது 3வது முறை.

1989-லும் முட்டை

1989-லும் முட்டை

இதற்கு முன்னர் 1989ஆம் ஆண்டு தேர்தலில் திமுக 32 இடங்களில் போட்டியிட்டு படுதோல்வியைத் தழுவியது. அப்போது அதிமுகவும் காங்கிரஸும் கூட்டணி அமைத்திருந்தன. திமுக அணியில் இடதுசாரிகளும் சுப்பிரமணியன் ஜனதா தளமும் இடம்பெற்றிருந்தன.

பெருந்தலைகள்

பெருந்தலைகள்

திமுகவின் மூத்த தலைவர்கள் என்.வி.என். சோமு (வடசென்னை), ஆலடி அருணா(தென் சென்னை), சுப. தங்கவேலன்( ராமநாதபுரம்), வைகோ (சிவகாசி) என பலரும் களம் கண்டிருந்தனர். அத்தேர்தலில் காங்கிரஸ் 27 இடங்களையும் அதிமுக 11 இடங்களையும் கைப்பற்றியது. ஆனால் மத்தியில் வி.பி.சிங் தலைமையிலான அரசு அமைந்தது. ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த முரசொலி மாறன் அந்த அரசில் அமைச்சரானார்.

1991-லும் தொடர் தோல்வி

1991-லும் தொடர் தோல்வி

இதேபோல் 1991ஆம் ஆண்டு ராஜிவ் படுகொலையைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தல். அத்தேர்தலிலும் காங்கிரஸ்- அதிமுக கூட்டணி அமைத்திருந்தன. அப்போது திமுகவுடன் ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்திருந்தன. அப்போதும் திமுக படுதோல்வியைத்தான் சந்தித்தது.. ஒரு இடத்திலும் கூட திமுக வெல்வில்லை. அந்த தேர்தலிலும் ஆலடி அருணா, என்.வி.என். சோமு, டி.ஆர்.பாலு, சி.டி. தண்டபாணி, மாயத்தேவர், கே.பி. கந்தசாமி ஆகிய திமுக மூத்த தலைவர்கள் களம் கண்டனர். மொத்தம் 30 தொகுதிகளில் திமுக போட்டியிட்டு ஒரு இடத்திலும் கூட வெல்ல முடியாமல் போனது.

3வது முறையாக முட்டை

3வது முறையாக முட்டை

தற்போது 3வது முறையாக படுதோல்வியைத் தழுவியது. இத்தேர்தலிலும் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ. ராசா என பெருந்தலைகளும் களம் கண்டு முழுமையான தோல்வியைத் தழுவியுள்ளது.

2 முறை 2 சீட்

2 முறை 2 சீட்

1977 , 1988 ஆகிய தேர்தல்களில் திமுக தலா 2 இடங்களைத்தான் கைப்பற்றியிருந்தது. 1998ஆம் ஆண்டு தேர்தலில் 5 இடங்களைத்தான் திமுக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

English summary
DMK trails in all 39 seats in Tamil Nadu and one seat in Puducherry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X