For Daily Alerts
Just In
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை திமுக புறக்கணித்தது தவறான முடிவு: ஞாநி
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக போட்டியிடாதது தவறான முடிவு என்று பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான ஞாநி தெரிவித்தார்.
திமுகவின் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு வெளியானதும், கருத்து தெரிவித்த ஞாநி "தேர்தல் ஆணையம் சார்புநிலை கொண்டது என்பது வெளிப்படையாக தெரிகிறது. இருந்தாலும் கூட, திமுக தேர்தலை புறக்கணித்தது ஒரு தவறான முடிவுதான்.

சட்டசபை பொதுத்தேர்தலையும், இதே தேர்தல் ஆணையம்தான் நடத்த உள்ளது. அப்போது மட்டும் திமுக எப்படி போட்டியிடப்போகிறது. இடைத் தேர்தலில் ஒரு நிலைப்பாட்டையும், பொதுத் தேர்தலில் வேறுமாதிரி நிலைப்பாட்டையும் எடுக்க கூடாது.
தேர்தல் ஆணையம் ஒரு தலை சார்பாக இருப்பது தெரிந்தால், அதை அம்பலப்படுத்த வேண்டுமே தவிர, தேர்தலில் போட்டியிடுவதில் இருந்தே திமுக வெளியேறி இருக்க கூடாது. இவ்வாறு ஞாநி தெரிவித்தார்.