For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகமே உற்று நோக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் மனு மீது காரசார விசாரணை தொடங்கியது!

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி திமுக தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.

இந்நிலையில் இன்று இந்த இரு வழக்குகளும் விசாரணைக்கு வந்துள்ளது. இதில் முதல் வழக்காக எதை விசாரிக்க வேண்டும் என்பது தொடர்பான வாதம் நடைபெற்றது. நீதிபதி இந்த வழக்குக்கு புதியவர் என்பதால் இரு தரப்பிலும் தாக்கல் செய்யும் மனுக்களை அலசி ஆராய்ந்து முடிவுக்கு காலம் பிடிக்கும் என்பதால் இன்று எவ்வித உத்தரவுகளும் பிறப்பிக்காமல் வழக்கு ஒத்தி வைக்கப்படும் என்றே தெரிகிறது.

DMK's Trust vote demanding plea hearing today

இந்நிலையில் ஆளுநரை சந்தித்த திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினர். எனினும் இது அதிமுகவின் உள்கட்சி விவகாரம் என்பதால் தன்னால் தலையிட முடியாது என்று ஆளுநர் கைவிரித்து விட்டார்.

இதனிடையே தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனை நடைபெற்று வருகிறது என்பதை தெரிவிக்க திமுக எம்எல்ஏக்கள் 20 பேர் சட்டசபைக்கு ஆதாரமாக குட்காவை கொண்டு வந்தனர். இந்த விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்துவிடக் கூடும் என்பதால் நீதிமன்றத்தை நாடிய திமுக தன் எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுப்பதற்கு தடை வாங்கியது.

சட்டசபையை கூட்ட ஆளுநர் மறுப்பு தெரிவித்துவிட்டதால் பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் அந்த 18 எம்எல்ஏக்களையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துவிட்டார். இதை எதிர்த்து 18 எம்எல்ஏக்களும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த இரு வழக்குகளும் கடந்த 14-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அக்டோபர் 4-ஆம் தேதி வரை நீதிபதிகள் தடை விதித்தனர். அதேபோல் 18 தொகுதிகளுக்கு மறுதேர்தல் அறிவிக்கக் கூடாது என்றும் அதேவேளையில் 18 பேரின் தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இன்று இந்த இரு வழக்குகளும் விசாரணைக்கு வரவுள்ளது. இன்று பிறப்பிக்கப்படும் உத்தரவை பொருத்து தமிழகத்தில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடைபெறலாம் என தெரிகிறது.

English summary
DMK files plea in Chennai HC demanding to order the ADMK government for trust vote was already postponed to hearing on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X