For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் ஆணையம் மீது வழக்கு தொடர அனுமதி கோரி ஜனாதிபதிக்கு கருணாநிதி கடிதம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் ஆணையத்தின் மீது வழக்கு தொடர ஜனாதிபதி அனுமதி அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தி.மு.க., தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது அறிக்கையில், மவுலிவாக்கத்தில், 61 பேர் பலியான விபத்து குறித்து உண்மைகள் வெளிவர சி.பி.ஐ., விசாரணைக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட வேண்டும்' என, கூறியுள்ளார்.

DMK seeks permission from President to sue the Election Commission

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம், 'தமிழகத்தில் அரசியல் சாராத ஓய்வு பெற்ற நீதிபதிகள் 100க்கும் மேற்பட்டவர்கள் உள்ள நிலையில், அவர்களில் யாரையாவது, விசாரணை நீதிபதியாக நியமிக்க வேண்டும்' என, கூறியுள்ளார்.

விஜயகாந்த், ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில், தலைமை தேர்தல் கமிஷனர் மீதும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மீதும் வழக்கு தொடர அனுமதி கேட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் பா.ம.க., வழக்கு தொடரவுள்ளது.

மதிமுக பொதுச்செயலர் வைகோவும், தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை; போலீசார் உதவியுடன் பண விநியோகம் நடைபெற்றது எனக் கூறியிருக்கிறார்.

எனவே, உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க., வழக்கு தொடர விரைவில் ஜனாதிபதி அனுமதி வழங்க வேண்டும்

இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
DMK leade Karunanidhi on Thursday sought permission from President Pranab Mukherjee to sue the Election Commission for its "biased approach" during the polls in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X