For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுகவின் மாதிரி சட்டசபை விளையாட்டுத்தனமானது : டி.டி.வி தினகரன் விமர்சனம்

திமுகவின் மாதிரி சட்டசபை விளையாட்டுத்தனமானது என்று டி.டி.வி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டெர்லைட் மூடல் வலியுறுத்தி திமுக தீர்மானம் நிறைவேற்றம்- வீடியோ

    சென்னை : பட்ஜெட் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொள்ளாமல் திமுக மாதிரி சட்டசபை நடத்தி இருப்பது விளையாட்டுத்தனமானது என்று ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர்.

    DMK should attend Assembly meeting says TTV Dhinakaran

    மேலும், அண்ணா அறிவாலயத்தில் திமுக மாதிரி சட்டசபை நடத்தியதில், அவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, தூத்துக்குடியில் இறந்தவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    இதுகுறித்து அமமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், ஆர்கே நகர் சட்டசபை உறுப்பினருமான டி.டி.வி தினகரன் கூறுகையில், சட்டசபைக் கூட்டத்தை திமுக புறக்கணித்து மாதிரி சட்டசபை நடத்தி இருப்பது விளையாட்டுத்தனமானது.

    அதனைக் கைவிட்டு திமுகவினர் சட்டசபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும். சட்டசபையில் ஈபிஎஸ் ஓபிஎஸ் புகழ்பாடுமன்றமாக மாற்றப்பட்டு இருக்கிறது. ஸ்டெர்லைட்டை மூடும் அரசாணை தற்காலிகமானது.

    இதில் உறுதியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். ஸ்டெர்லைட்டை மூட தமிழக அரசு சட்டசபையில் சட்டம் இயற்றவேண்டும். தமிழ்நாட்டிற்கு ஸ்டெர்லைட் மட்டுமல்ல எந்த ஒரு தாமிர ஆலையும் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    English summary
    DMK should attend Assembly meeting says TTV Dhinakaran. RK Nagar MLA TTV Dhinakaran says that, TN Government should pass act on Closing Sterlite.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X