For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக கூட்டணியில் இருந்து எஸ்.டி.பி.ஐ கட்சி விலகியது அக்கட்சியின் முடிவு: ஸ்டாலின் பேட்டி

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: திமுக கூட்டணியில் இருந்து எஸ்.டி.பி.ஐ கட்சி விலகியது அக்கட்சியின் இருப்பினும் அக்கட்சியுடன் ஏற்பட்டுள்ள வேறுபாடுகளைக் களைய முயன்று வருவதாகவும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைமையிலான கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி இடம் பெற்றிருந்தது. காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இணைந்திருந்தன. இக்கட்சிகளுடன் திமுக தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடைபெற்று வருகிறது.

DMK Stalin Meets Press in Chennai

இதில் காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகள் மட்டும் உறுதி செய்யப்பட்டு நேற்று மாலை பட்டியல் வெளியிடப்பட்டது. மற்ற கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் ஓரிரு நாளில் முடிவு செய்யப்பட்டுவிடும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ கட்சி, மாநில தலைவர் தலைமையில் 5 பேர் அடங்கிய குழு நேற்று திமுக தொகுதி பங்கீட்டு குழுவினரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தெஹ்லான் பாகவி பேசினார். அப்போது அவர் கூறுகையில், "திமுக கூட்டணியில் இருந்து எஸ்.டி.பி.ஐ கட்சி வெளியேறுகிறது. எங்களுக்கான முக்கியத்துவத்தை திமுக அளிக்கவில்லை. அடுத்தகட்ட முடிவு பற்றி இன்று அறிவிக்க உள்ளதாக கூறினார்.

இதனிடையே மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா நேற்று மாலை ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், மனித நேய மக்கள் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடைபெற்றது. அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் இன்று முடிவு செய்யப்படும் என்றார்.

மேலும், கூட்டணியில் இருந்து எஸ்.டி.பி.ஐ கட்சி, கட்சி வெளியேறியது குறித்து கருத்து கேட்டபோது, கூட்டணியில் இருந்து எஸ்.டி.பி.ஐ கட்சி விலகியது அக்கட்சியின் சொந்த முடிவு. இருப்பினும் அக்கட்சியுடன் ஏற்பட்டுள்ள வேறுபாடுகளைக் களைய திமுக முயன்று வருவதாகவும் ஸ்டாலின் தெரிவி்த்தார்.

English summary
MK Stalin Press meet after Sdpi comes out dmk alliance
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X