For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உதயநிதிக்காக விருப்ப மனுக்கள்... ரிசர்வ் தொகுதியாக்க போராடும் விசிக.. திமுக கூட்டணியில் லடாய்?

Google Oneindia Tamil News

Recommended Video

    அப்பா சொன்னால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தயார் - உதயநிதி ஸ்டாலின்

    சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தலில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்பதற்காக அக்கட்சியினர் விருப்ப மனுக்களை கொடுத்து வருகின்றனர். அதேநேரத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியோ சென்னை மாநகராட்சி மேயர் பதவியை ரிசர்வ் தொகுதியாக்க வேண்டும் என போராடி வருகிறது. இது திமுககூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திமுக கூட்டணியில் எப்போதும் ஒட்டியும் ஒட்டாமல் இருப்பது விடுதலை சிறுத்தைகள் கட்சிதான். இருந்தபோதும் தலித் வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்பதற்காக கூட்டணியில் விசிகவை தக்க வைத்து கொண்டிருக்கிறது திமுக.

    லோக்சபா தேர்தலில் கூட சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனுக்கு திமுகவினர் முழுமையாக ஒத்துழைப்பு தரவில்லை என்கிற புகாரும் இருந்து வருகிறது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் இறுதியில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரத்தில் யாரை காப்பாற்ற முயற்சி?.. கனிமொழி எம்பி கேள்விஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரத்தில் யாரை காப்பாற்ற முயற்சி?.. கனிமொழி எம்பி கேள்வி

    உதயநிதிக்காக மனு

    உதயநிதிக்காக மனு

    இதற்கான நிர்வாகிகளிடம் இருந்து இருந்து விருப்ப மனுக்களை அனைத்து கட்சிகளும் பெற்று வருகின்றன. திமுகவில் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்பதற்காக பலரும் விருப்ப மனுக்களை கொடுத்து வருகின்றனர்.

    மு.க.ஸ்டாலின் பாணி

    மு.க.ஸ்டாலின் பாணி

    மு.க.ஸ்டாலின் சென்னை மேயர்ராக பதவி வகித்து பின்னர் அமைச்சர், துணை முதல்வரானார். அதே பாணியில் உதயநிதியையும் மேயராக்க வேண்டும் என்பது திமுகவினரின் விருப்பம்.

    விசிக வியூகம்

    விசிக வியூகம்

    திமுகவினர் இப்படி உதயநிதி ஸ்டாலினுக்காக விருப்ப மனுக்களை கொடுத்து வருகின்றனர். அதேநேரத்தில் திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகளோ சென்னை மாநகராட்சியை ரிசர்வ் தொகுதியாக்க வேண்டும் என போராடுகிறது.

    முதல்வருடன் சந்திப்பு

    முதல்வருடன் சந்திப்பு

    இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மனு கொடுத்துள்ளார். இது திமுகவினரை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

    திமுக அதிருப்தி

    திமுக அதிருப்தி

    இது குறித்து கருத்து தெரிவித்த திமுக நிர்வாகிகள், உதயநிதி ஸ்டாலின் வேட்பாளர் என திமுக அறிவிக்கவில்லை. ஆனால் உதயநிதிக்காக விருப்ப மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தெரியாதது அல்ல.

    திமுகவை சீண்டுவதா?

    திமுகவை சீண்டுவதா?

    இப்படி சூழ்நிலை இருக்கும் போது சென்னை மாநகராட்சியை ரிசர்வ் தொகுதியாக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி முழு வீச்சில் முயற்சிப்பது திமுகவினரை சீண்டிப் பார்க்கும் வேலைதானே என கொந்தளிக்கின்றனர்.

    English summary
    According to the sources DMK Senior leader very upset over the VCK's demand to change the Chennai Corporation for SC.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X