For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுகவினருக்கு அதிர்ச்சி.. அழகிரி சட்டுன்னு இப்படி ஒரு வார்த்தையை சொல்லிவிட்டாரே!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    அழகிரி சட்டுன்னு இப்படி ஒரு வார்த்தையை சொல்லிவிட்டாரே!- வீடியோ

    சென்னை: திருமங்கலம், திருவாரூர் இடைத் தேர்தல்களில் திமுக 4வது இடத்தைதான் பிடிக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்தார்.

    ஆங்கில தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அழகிரி பரபரப்பான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

    அழகிரி கூறியதாவது: திருமங்கலம் பார்முலா என்றால் ஏதோ பணத்தை கொடுத்து ஜெயித்த தேர்தல் என்கிற குற்றச்சாட்டு சொல்கிறார்கள். ஆனால் 1962 இல் இருந்து கருணாநிதி எப்படி தேடுதல் பணியாற்றுகிறார் என்பதை நான் கவனித்துள்ளேன்.

    கருணாநிதி பாணி

    கருணாநிதி பாணி

    கருணாநிதியை கொல்ல முயற்சி நடந்தது. ஆனாலும் இரவு, பகல் பாராமல் பணியாற்றுவார். நள்ளிரவு ஒரு மணியளவில் திடீரென பூத்துக்கு செல்வார். அங்கே தொண்டர்கள் தூங்குகிறார்களா? வேலை பார்க்கிறார்களா என்பதை நேரடியாக ஆய்வு செய்வார். அவர் தொண்டர்களுக்கு உற்சாகத்தை கடத்தி செல்வார். வகுப்பறையில் ஆசிரியர் எப்படி மாணவர்களை கையாளுவாரோ அப்படி நடந்து கொள்வார். அதே பாணியைத்தான் நானும் திருமங்கலத்தில் கையாண்டேன். திருமுங்கலத்தில் கிடைத்தது, நேர்மையான வெற்றி.

    நான்காவது இடம்

    நான்காவது இடம்

    நான் இல்லாமல் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவ வெல்லவே முடியாது. வெற்றியா.. மூன்றாவது இடத்துக்கு தான் வருவார்கள். திருப்பரங்குன்றத்தில் நான்காவது இடத்திற்கு போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    அடுத்தவர் பேச்சை கேட்கமாட்டேன்

    அடுத்தவர் பேச்சை கேட்கமாட்டேன்

    நேற்றுதான் பேரணி முடிந்துள்ளது. இன்று எதையும் செய்ய முடியாது. நான் இன்னும் பல பேரிடம் கலந்து பேச வேண்டியுள்ளது. தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை தான் செய்ய முடியும். நான் ஒரு கார்ப்பரேட் கம்பெனி மாதிரி அடுத்தவன் பேச்சை கேட்டு செய்ய முடியாது. என்னை நம்பி உள்ளவர்களுக்கு, கடைசிவரை நிச்சயம் பாதுகாவலராக இருப்பேன்.

    பொறுமைக்கும் எல்லை உள்ளது

    பொறுமைக்கும் எல்லை உள்ளது

    எவ்வளவு பேர் என்னை நம்பி பேரணிக்கு வந்தார்கள். அவர்களுக்காகவாவது நல்ல முடிவை எடுப்பேன். பொறுமைக்கும் ஓர் எல்லை உள்ளது. காத்திருந்து பார்ப்போம். திமுகவில் என்னை சேர்க்காவிட்டால், நாங்களும் எங்கள் முடிவை எடுப்போம். இவ்வாறு அழகிரி தெரிவித்தார்.

    English summary
    DMK will not win without my support. They may even fall to the 4th position, says expelled DMK leader Alagiri in an exclusive interview with India Today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X