For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்.கே. நகரில் திமுகவிற்கு 35.25%, ஓபிஎஸ் அணிக்கு 29.50% பேர் ஆதரவு- இது குமுதம் ரிப்போர்ட்டர் சர்வே

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு 35.25% பேர் ஆதரவு அளிப்பதாக குமுதம் ரிப்போர்ட்டர் சர்வே தெரிவித்துள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பலமுனை போட்டி நிலவினாலும் ஓபிஎஸ் அணிக்கும் திமுகவிற்கும்தான் போட்டி அதிகமாக உள்ளது. திமுகவிற்கு 35.25% பேர் ஆதரவு அளிப்பதாக குமுதம் ரிப்போர்ட்டம் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் களத்தில் அனலடிக்கிறது. 8 முனை போட்டியால் வாக்காளர்கள் திக்குமுக்காடி போயுள்ளனர். திமுக, அதிமுக அம்மா, அதிமுக புரட்சித்தலைவி அம்மா, தீபா, தேமுதிக, பாஜக, நாம் தமிழர்கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என வேளைக்கு ஒருவராக வந்து வாக்காளர்களை சந்தித்து ஆதரவு கேட்கின்றனர்.

டிடிவி தினகரன், மதுசூதனன், தீபா, மருதுகணேஷ், மதிவாணன், கங்கை அமரன், கலைக்கோட்டுதயம், லோகநாதன் என வரிசையாக வேட்பாளர்கள் பகல் இரவாக வந்து வாக்காளர்களை கையெடுத்து கும்பிட்டு அசந்து போய்தான் உள்ளனர்.

குமுதம் ரிப்போர்ட்டர் சர்வே

குமுதம் ரிப்போர்ட்டர் சர்வே

ஆர்.கே. நகரில் வாக்காளர்களின் ஆதரவு யாருக்கு என்று குமுதம் ரிப்போர்ட்டர் சர்வே நடத்தியது. அதில் பல முடிவுகள் வெளியாகியுள்ளன. மொத்தம் 4865 வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட சர்வேயில் 3035 ஆண்களும், 1830 பெண்களும் பங்கேற்றனர்.

இரட்டை இலை சின்னம்

இரட்டை இலை சின்னம்

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதை அடுத்து அதிமுக இரு அணிகளும் வேறு சின்னத்தில் போட்டியிடுகின்றன. அதிமுக அம்மா வேட்பாளர் டிடிவி தினகரன் தொப்பி சின்னத்திலும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனன் இரட்டை மின் விளக்கு சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இந்த சின்னங்கள் வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க தனியாக போராடி வருகின்றனர்.

ஸ்டாலின் - ஓபிஎஸ்

ஸ்டாலின் - ஓபிஎஸ்

ஆர்.கே.நகரில் ஸ்டாலினுக்கு இளைய வாக்காளர்களின் ஆதரவு அதிகம் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் பெண்களின் ஆதரவு ஓபிஎஸ் அணிக்கே கிடைத்துள்ளது.

டிடிவி தினகரன் தொகுதிக்கு அறிமுகமில்லாதவர் என்பதால் அவருக்கு 3வது இடமே கிடைத்துள்ளது.

திமுகவிற்கு 32.25%

திமுகவிற்கு 32.25%

ஆர்.கே.நகரில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின்படி திமுகவிற்கு 35.25% வாக்காளர்களும், ஓபிஎஸ் அணிக்கு 29.50% வாக்காளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

டிடிவி தினகரன் - தீபா

டிடிவி தினகரன் - தீபா

டிடிவி தினகரனுக்கு 15.31% வாக்காளர்களும், தீபாவிற்கு 4.52% வாக்காளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு 3.08% வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சிக்கு 3.08% பேரும் ஆதரவு அளித்துள்ளனர்.

தேமுதிக பரிதாப நிலை

தேமுதிக பரிதாப நிலை

தமிழகத்தின் மூன்றாவது கட்சியாக உருவெடுத்த தேமுதிகவிற்கு 2.26% பேர் மட்டுமே வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர். அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு 2.47%பேர் ஆதரவு அளிப்போம் என்று கூறியுள்ளனர். நோட்டாவிற்கு 4.53%பேர் வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர்.

English summary
Tamil journal kumutham reporter survey revealed that 32.25% of people are supports DMK candidate in RK Nagar bypoll. The RK Nagar Assembly constituency, where a by-poll is scheduled for April 12, is heading for an electrifying fight as battlelines have been drawn with the announcement of candidates by the Dravidian parties.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X