For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எதுக்கு கையெழுத்து கேக்குறீங்க.. பதில் சொல்ல முடியாமல் முழிக்கும் திமுக நிர்வாகி.. வைரலாகும் வீடியோ

Google Oneindia Tamil News

Recommended Video

    எதுக்கு கையெழுத்து கேக்குறீங்க.. பதில் சொல்ல முடியாமல் முழிக்கும் திமுக நிர்வாகி.. வைரலாகும் வீடியோ

    சென்னை: குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றன. இதுவரை 2 கோடி கையெழுத்து பெறப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    அதேநேரம், பாஜகவோ, இந்த கையெழுத்து இயக்கத்தை நம்ப முடியாது என கூறி வருகிறது. அக்கட்சி மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், திமுகவினர் இரு கைகளாலும் கையெழுத்து போட்டு ஏமாற்றியிருப்பார்கள் என கூறுகிறார்.

    இந்த நிலையில்தான், ஒரு சர்ச்சை வீடியோ வைரலாக சுற்றி வருகிறது. அதில் ஒரு பெண்மணி கையெழுத்து போடும்படி மக்களிடம் கேட்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    சிஎம்-க்கு சிஏஏ பத்தி தெரியாது.. கம்ப ராமாயணத்தை எழுதியது சேக்கிழார்ன்னு சொல்றவரு: நாஞ்சில் சம்பத் சிஎம்-க்கு சிஏஏ பத்தி தெரியாது.. கம்ப ராமாயணத்தை எழுதியது சேக்கிழார்ன்னு சொல்றவரு: நாஞ்சில் சம்பத்

    ரகசிய வீடியோ

    ரகசிய வீடியோ

    அப்போது, செல்போன் வீடியோவை ரகசியமாக ஆன் செய்து கொண்ட ஒரு நபர், அந்த பெண்ணிடம், எதற்கு எங்களை கூப்பிட்டீர்கள், விளக்கம் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டீங்கிறீங்களே என வினவுகிறார். அதற்கு அந்த பெண், உன் கையெழுத்து வேணா.. போ.. என கூறுகிறார்.
    "அப்புறம் ஏன் கூப்பிட்டீங்க. கூப்பிட்டா என்ன காரணம்னு கேட்கத்தான் செய்வோம்.." இது அந்த நபர்.

    ரீசன் என்ன

    ரீசன் என்ன

    "அதான் ரீசன் சொன்னேனே.." "என்ன ரீசன் சொன்னீங்க..", "மோடி கொண்டுவர்ற சட்டம் சரியில்லை. அத சரிபண்ணப்போறோம்னு சொன்னேனே", "சரியில்லைங்கிறீங்க.. என்னதான் சரியில்லை?" இப்படி இரு தரப்பும் மாறி மாறி கேள்வி பதிலாக நீள்கிறது அந்த ஆவேச உரையாடல்கள்.
    இதையடுத்து வேறு ஒரு பெண் வந்து தலையிட்டு, கையெழுத்து வாங்க வந்த பெண்ணை வேறுபக்கம் தள்ளிச் செல்கிறார்.

    விழிப்புணர்வு தேவை

    விழிப்புணர்வு தேவை

    இதையடுத்து அந்த வீடியோ முடிவடைகிறது. குடியுரிமை சட்டத் திருத்தத்தில் மதபாகுபாடு காட்டப்படுவதற்கு எதிராகத்தான் திமுக கையெழுத்து இயக்கம் நடத்துகிறது. நல்ல விஷயம்தான். ஆனால் கையெழுத்து இயக்கம் நடத்துவோர் அனைவருக்கும் அது குறித்த புரிதல் சொல்லித் தரப்பட்டுள்ளதா என்றால் இல்லை என்றுதான் தெரிகிறது.

    விளக்கம்

    மோடி கொண்டு வந்த சட்டம்.. அதை எதிர்க்கனும் என்ற அடிப்படையில்தான் திமுக அடிமட்ட தொண்டர்களுக்கு சொல்லி கையெழுத்து வாங்க சொல்லியிருப்பார்கள் போல தெரிகிறது. எனவேதான், அவர்களால் கேள்விகேட்போருக்கு விளக்கம் அளிக்க முடியவில்லை. இந்த விஷயத்தில் திமுக தலைமை கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்கிறார்கள், நெட்டிசன்கள்.

    English summary
    DMK cader who try to get signature for anti CAA is not able to give answer.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X