For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதங்களை விமர்சிப்பதை திமுக ஊக்கப்படுத்தாது.. சொல்கிறார் ஸ்டாலின்!

மதங்களை விமர்சிப்பதை திமுக ஊக்கப்படுத்தாது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: மதங்களை விமர்சிப்பதை திமுக ஊக்கப்படுத்தாது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து கூறிய கருத்து பூதாகரைமாகியுள்ளது. ஆண்டாள் குறித்து கருத்து கூறியதற்காக வைரமுத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

DMK would not encourage criticism of religions: Stalin

திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து கூறிய வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். திமுகவினர் இந்து மதத்தை பழிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மதங்களை விமர்சிப்பதை திமுக ஊக்கப்படுத்தாது என்று கூறினார். தாம் வளர்வதற்காக சிலர் தேவையற்ற பேச்சை பேசுகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

வைரமுத்து மனமார வருத்தம் தெரிவித்த பிறகும் சிலர் தங்களின் சுயநலனுக்காக வைரமுத்து மீது அராஜகமான கருத்து தெரிவிக்கின்றனர் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
அநாகரிகத்திற்கும் வரம்புமீறலுக்கும் நிச்சயம் தமிழகத்தில் இடமில்லை என்றும் அவர் கூறினார்.

English summary
DMK working president Stalin has said DMK would not encourage criticism of religions. Stalin said this on Vairamuthu statement on Goddess Andal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X