For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனப் பட்டாசுகளை ஒருபோதும் அனுமதிக்க கூடாது: வேல்முருகன்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவிற்குள் சீனப் பட்டாசுகளை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் 850க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றன. இந்த ஆலைகளில் 1 லட்சம் பேர் நேரடியாகவும், 2 லட்சத்திற்கு மேற்பட்டோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

Do not allow the Chinese crackers: Velmurugan

சிவகாசியில் உற்பத்தியாகும் பட்டாசுகள் இந்திய அளவில் 90 விழுக்காடு வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த தொழிலில் ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடிக்கு அதிகமாக வியாபாரம் நடக்கிறது. கலால் மற்றும் விற்பனை வரியாக மத்திய, மாநில அரசுகளுக்கு கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது.

கடந்த ஆண்டு சீன பட்டாசு வருகை காரணமாக சிவகாசி பட்டாசு விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளுக்கு இந்த ஆண்டு மட்டும் ரூ.2,000 கோடி அளவுக்கு ஆர்டர்கள் குறைந்து போயுள்ளன. இதனால் அரசுக்கும் ரூ.530 கோடி வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் வாரத்துக்கு 3 நாட்கள்தான் வேலை என்பது நடைபெறுகிறது. இந்த மோசமான நிலைமைக்கு காரணமே சீனா பட்டாசுகளின் வரத்துதான்.

சீனா பட்டாசுகள் விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் வெவ்வேறு பெயர்களில் சீனாவில் இருந்து பட்டாசுகளை கொள்முதல் செய்வதில் சமூகவிரோத கும்பல் மும்முரம் காட்டவே செய்யும்.

ஆகையால் தமிழர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் இந்த சீனா பட்டாசுகளை துறைமுகங்கள், விமான நிலையங்கள் வழியாக கொண்டுவரப்படுவதை மிகத் தீவிரமாக கண்காணித்து தடுத்தாக வேண்டும். தீபாவளி நெருங்கி வரும் நிலையில் சீனா பட்டாசுகள் பதுக்கப்பட்டுள்ள இடங்களை கண்டறிந்து அழித்து அவற்றை பதுக்கியோர் மீது கடும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்

இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

English summary
TVK leader Velmurugan has urged "Do not allow the Chinese crackers in the indian market"
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X