For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விபத்துகளை தவிர்க்க ரயில் படிக்கட்டில் பயணம் செய்ய கூடாது.. சைலேந்திர பாபு

சென்னை மின்சார ரயில் போக்குவரத்தில் ஏற்பட்ட அலட்சியம் காரணமாக 5 பேர் பலியாகி உள்ளனர்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    தடுப்புச்சுவரை அகற்றும் வரை ரயில்களை இயக்க கூடாது - சைலேந்திர பாபு-வீடியோ

    சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் தடுப்புச்சுவரை அகற்றும் வரை ரயில்களை இயக்க கூடாது என்று ஆணையிட்டு இருப்பதாக ரயில்வே துறையின் கூடுதல் காவல் இயக்குனராக இருக்கும் சைலேந்திர பாபு ஐபிஎஸ் பேட்டியளித்துள்ளார்.

    சென்னையில் தற்போது பல்வேறு இடங்களில் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் கூட்ட நெரிசல் ரயிலில் ஏற்பட்டு இருக்கிறது.

    Do not run the trains until the removal of the barrier in St. Thomas Mount says Sylendra Babu

    இந்த கூட்ட நெரிசலால் படிக்கட்டில் தொங்கிய பயணிகள் பக்கவாட்டு தடுப்பு சுவர் தாக்கி கீழே விழுந்துள்ளார். இதில் 7 பேர் காயம் அடைத்துள்ளனர். மின்கம்பி மோதி ரயிலில் தொங்கிய 5 பேர் பலியாகி உள்ளனர்.

    இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து ரயில்வே துறையின் கூடுதல் காவல் இயக்குனராக இருக்கும் சைலேந்திர பாபு ஐபிஎஸ் பேட்டியளித்துள்ளார். அதில் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் தடுப்புச்சுவரை அகற்றும் வரை ரயில்களை இயக்க கூடாது என்று ஆணையிட்டு இருப்பதாக கூறியுள்ளார்.

    ரயில் பயணிகள் படிக்கட்டில் பயணிக்க கூடாது. இப்போது பயணிகள் படிக்கட்டில் தொங்கியதால்தான் இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கிறது. விபத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

    கவனக்குறைவால் விபத்துகள் ஏற்படுகிறது. முடிந்தவரை ரயிலின் படியில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

    English summary
    Do not run the trains until the removal of the barrier in St. Thomas Mount says Sylendra Babu IPS, The Additional Director General of Police of the Railways.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X