For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலுக்கியெடுத்த ஓகி புயல் பெயருக்கு என்ன அர்த்தம் தெரியுமா? அசந்துருவீங்க

தென் தமிழகத்தையே ஒரு கலக்கு கலக்கிய ஓகிக்கு அர்த்தம் என்ன என்பது தெரியுமா.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    உலுக்கியெடுத்த ஓகி புயல் பெயருக்கு என்ன அர்த்தம் தெரியுமா? அசந்துருவீங்க

    சென்னை: ஓகி புயலுக்கு வங்கதேசம் நாடு பெயர் வைத்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதன் அர்த்தம் என்ன என்று யாருக்காவது தெரியுமா. ஓகி என்றால் வங்க மொழியில் கண் என்ற அர்த்தமாம்.

    புயல்களுக்கு பெயர் வைக்கும் முறையை உலக வானிலை அமைப்பு மற்றும் ஐ.நா. தேசிய பொருளாதார மற்றும் ஆசிய- பசிபிக்கிற்கான சமூக அமைப்பு ஆகியன கடந்த 2000-ஆம் ஆண்டு தொடங்கியது.

    வானிலை முன்னறிவிப்பாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே முன்னறிப்பு, எச்சரிக்கை உள்ளிட்டவை குறித்த தகவல்களை எளிதாக பரிமாறப்படுவதற்காக வெப்ப மண்டல் சூறாவளிகளுக்கு பெயர் வைக்கும் பழக்கம் உருவாகியுள்ளது.

     பெயர் வைத்து வரும் பகுதிகள்

    பெயர் வைத்து வரும் பகுதிகள்

    வடக்கு அட்லாண்டிகா, வடகிழக்கு பசிபிர், வட மத்திய பசிபிக், வடமேற்கு பசிபிக், வட இந்திய கடல், தென்மேற்கு இந்திய கடல், ஆஸ்திரேலியன்ஸ தென் பசிபிக் மற்றும் தெற்கு அட்லாண்டிக் ஆகிய நாடு முழுவதும் ஏற்படும் புயல்களுக்கு 9 பகுதிகளே பெயர் வைத்து வருகின்றன.

     64 பெயர்கள்

    64 பெயர்கள்

    வடகிழக்கு இந்திய நாடுகளில் வங்கதேசம், இந்தியா, மாலத் தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய 8 நாடுகள், 8 பெயர்களை கொடுக்கும். அதன் படி மொத்தம் 64 பெயர்கள், ஒரு நாட்டுக்கு ஒரு பெயர் என்ற வரிசையில் புயலுக்கு பெயர் வைக்கப்படும்.

     ஓகி என்றால் என்ன?

    ஓகி என்றால் என்ன?

    தற்போது தென் தமிழகத்தையே ஒரு கலக்கு கலக்கிய புயலுக்கு ஓகி என்ற பெயர் வைத்தது வங்கதேசம் ஆகும். வங்க மொழியில் ஓகி என்றால் கண் ஆகும்.

     அடுத்த புயலுக்கு பெயர் என்ன?

    அடுத்த புயலுக்கு பெயர் என்ன?

    கடந்த மே மாதம் வடகிழக்கு இந்தியாவில் கடும் சேதத்தை விளைவித்த புயலுக்கு மோரா என்று தாய்லாந்து பெயர் வைத்தது. மோரா என்றால் கடலின் நட்சத்திரம் என்று பொருளாகும். அடுத்து ஏற்படும் புயலுக்கு சாகர் என்று பெயர் சூட்டப்படவுள்ளது. இது இந்தியா பரிந்துரைத்த பெயராகும்.

    English summary
    Cyclone Ockhi is expected to bring heavy to very heavy rainfall over south Tamil Nadu during the next 36 hours. The name Ockhi was given by Bangladesh which in Bengali means ‘eye’.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X