For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீட் தேர்வில் மாபெரும் மோசடி... குஜராத்தில் மட்டும் ஈஸி கேள்விகள்.. மருத்துவர்கள் சங்கம் புகார்

நீட் தேர்வில் குஜராத் மாநிலத்தில் எளிமையான கேள்விகள் கேட்கப்பட்டதாக மருத்துவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. மோசடி நடந்துள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வில் பெரும் மோசடி நடந்துள்ளதாகவும், குஜராத் மாநிலத்திற்கு மட்டுமே எளிமையான கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் மருத்துவர் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் மருத்துவ படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடத்தப்பட்டது. பெரும் கெடுபிடிகளுடன் மாணவர்கள் நடத்தப்பட்டனர். கடுமையான சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்ட மாணவர்கள் கடும் மன உளைச்சலுடன் தேர்வை எழுதினர். தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித்தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

Doctors association want the cancellation of NEET

உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் நீட் தேர்வில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக
சமூக சமத்துவத்துவ மருத்துவ சங்க நிர்வாகி ரவீந்தரநாத் புகார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரவீந்தரநாத், நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு என்று கூறிவிட்டு வெவ்வேறு மாநிலங்களில் வேறு வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக புகார் கூறினார்.

குஜராத் மாநிலத்தில் எளிமையான முறையில் கேள்வித்தாள் கேட்கப்பட்டிருந்தாக கூறிய ரவீந்தரநாத், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இதே போல கடந்த 2015ஆம் ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதாகவும் கூறினார்.

குஜராத்தில் மட்டுமே நீட் தேர்வு கேள்வித்தாள்கள் எளிமையான முறையில் இருந்ததாக இருந்தது பாரபட்சமானது என்றார். நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு என்ற கூறிவிட்டு வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது சதிச்செயல் என்றார். குஜராத் மாணவர்கள் அதிக அளவில் டாக்டர்கள் ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த சதி நடந்துள்ளது என்றார்.

மோசடியான நீட் தேர்வை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாகவும் ரவீந்தரநாத் கூறினார். நீட் தேர்வு பற்றி ஆரம்பம் முதலே தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தவறாக தகவல்களையே கூறி வருகிறார் என்றும் ரவீந்தரநாத் தெரிவித்தார். இது தேசிய தகுதித்தேர்வா? குஜராத் தகுதித்தேர்வா என்றும் ரவீந்தரநாத் கேள்வி எழுப்பினார்.

நீட் தேர்வு பற்றி சிபிஎஸ்இ கூறியதை ஏற்க முடியாது ஒரே மாதிரியான கேள்வித்தாளில் தேர்வு நடத்த வேண்டும் என்றும் ரவீந்தரநாத் கூறியுள்ளார்.
நீட் தேர்வு பற்றி ரவீந்தரநாத் கூறியுள்ள புகார் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. கல்வியாளர்கள் பலரும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

English summary
Samathuva Doctors association has urged the centre to abolish the NEET examination immediately.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X