For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்களை பாதிக்காத வகையில் டாக்டர்கள் போராட்டம் தொடரும்.. மருத்துவ சங்க செயலாளர் கதிர்வேல் பேட்டி

சென்னை: மக்களை பாதிக்காத வகையில் போராட்டம் தொடரும் என்று தமிழ்நாடு மருத்துவ சங்க செயலாளர் கதிர்வேல் தெரிவித்துள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: மக்களை பாதிக்காத வகையில் போராட்டம் தொடரும் என்று தமிழ்நாடு மருத்துவ சங்க செயலாளர் கதிர்வேல் தெரிவித்துள்ளார்.

மருத்துவ மேற்படிப்புகளுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு ஏமாற்றத்தை அளிப்பதாக கடந்த 18 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களும், மாணவர்களும் தெரிவித்துள்ளனர்.

doctors and students decided continue their protests

மாநில அரசின் உரிமையை பறிக்கும் 50 சதவீத இடஒதுக்கீட்டு முறையை குறைந்தபட்சம் இந்த ஆண்டாவது விலக்கு பெற வேண்டும் என்று வலியுறுத்தி மருத்துவர்கள் மற்றும் மாணவரின் ஒருபிரிவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து போராட்டக்காரர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை செயலகத்தில் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை இரவு 10 மணியளவில் நிறைவு பெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க செயலாலர் பாலகிருஷ்ணன் போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தார். ஆனால் மற்றொரு பிரிவினர் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவர் அலுவலர் சங்க மாநில செயலாளர் கதிர்வேல் கூறுகையில், அடுத்த ஆண்டு 50 சதவீத இடஒதுக்கீடை தற்செயல் விடுப்பு, ஈட்டிய விடுப்பு, ஈடுகட்டிய விடுப்பு உள்ளிட்ட விடுப்புகளை பயன்படுத்தி சுழற்சி முறையில் போராட்டத்தை தொடர உள்ளோம். கோரிக்கைகள் நிறைவேறும் வரை மருத்துவ சேவைகள் பாதிக்காத வகையில் தொடர்ந்து சுழற்சி முறையில் போராட்டம் நடைபெறும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஒரு மருத்துவர் பணியில் இருக்க உறுதி செய்துள்ளோம் என்றார்.

English summary
tamilnadu doctors and students decided continue their protests
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X