For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குன்னூரில் நாய் கண்காட்சி - ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள் சாகசங்களை செய்து அசத்தல்

நாய்கள் கண்காட்சியில் ஏராளமான நாய்கள் சாகசங்களை செய்து பார்வையாளர்களை அசத்தின.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள் சாகசங்களை செய்து அசத்தல்- வீடியோ

    குன்னூர்: குன்னூரில் நடத்தப்பட்ட நாய்கள் கண்காட்சியில் ஜெர்மன் ஷெப்பர்டு ரக நாய்கள் பல பங்கேற்று சாகசங்களை நடத்தியதுடன், சுற்றுலாபயணிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தின.

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசன் மற்றும் இரண்டாவது சீசன் நாட்களில், 'நீலகிரி கெனல் கிளப்' சார்பில், நாய்கள் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.

    Dogs Exhibition in Coonoor

    அதன்படி, இந்த ஆண்டுக்கான கண்காட்சி, குன்னுார் புராவிடன்ஸ் கல்லுாரியில் நேற்று நடைபெற்றது.காவல் துறை, ராணுவம் மற்றும் ரயில்வே போலீஸ் நிலையங்களில் குற்றங்களை கண்டறிய பயன்படுத்தப்படும் ஜெர்மன் ஷெப்பர்டு ரக நாய்கள் கண்காட்சியில் கலந்துகொண்டன.

    மேலும், டாக்கோ அர்ஜென்டினா, டாக்கோடிகா, சயின் பராண்டா, பாஸ்மினோ, டேஸண்ட், பாஸ்மீ ஆப் பொமேரியன் உட்பட, பல்வேறு ரகங்களில், 190 நாய்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றன.

    கட்டளைகளுக்கு கீழ்படிதல், மோப்ப திறன் உள்ளிட்ட பல்வேறு சாகசங்களை அவை செய்துகாட்டின. இதனை கண்ட சுற்றுலா பயணிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். பின்னர் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த நாய்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் உள்ளுர் மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு ரசித்தனர்.

    English summary
    The German Shepherd dogs in Connor conducted a number of participating dogs at the exhibition. The German Shepherd dog dogs were used to find guilty in police, military and railway police stations. The best dogs of adventure were selected and prizes were awarded.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X