For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கனமழை பெய்து சென்னை மூழ்கும் என வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவும் தகவல்: ரமணன் விளக்கம்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கனமழை பெய்யும், நகரமே மூழ்கும் என எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்ஆப்பில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

‘‘சென்னையில் மீண்டும் கனமழை பெய்யும், சென்னை நகரமே மூழ்கும் அளவுக்கு தொடர் மழை பெய்யும், ஜோதிடம் பொய்க்காது, பல்வேறு ஆதாரமான தகவல்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன'' என்ற தகவல் எஸ்.எம்.எஸ். மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் பரவி வருகிறது.

Don't believe in the message circulated in whatsapp about Chennai: Ramanan

இந்த தகவலில் உண்மை இல்லை. நாளை வரை பெரும்பாலான இடக்களில் மழை பெய்யும் என்றும், 8ம் தேதிக்கு பின் மழை படிப்படியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதனால் கனமழை, நகரம் மூழ்கும் என்று வரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்.

குமரி கடல் பகுதியில் இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஆனால் கனமழைக்கு வாய்ப்பு இல்லை.

கிழக்கில் இருந்து சென்னையை நோக்கி மேகக் கூட்டங்கள் வருவதால் விட்டு விட்டு மழை பெய்யும். காற்றின் வேகம் அதிகரிக்கும் போது மட்டும் கனமழை பெய்யும் மற்றபடி சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றார்.

English summary
Meteorological department director Ramanan has asked the people not to believe the message doing rounds in whatsapp saying that heavy rain will lash till Chennai gets submerged.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X