For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீபாவளி பட்டாசு... ராத்திரி 10 மணிக்கு மேல் வெடிக்காதீங்க...- மாசு கட்டுப்பாடு வாரியம்

தீபாவளி திருநாளை கொண்டாடுபவர்கள் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணிவரை பட்டாசு வெடிக்கக் கூடாது என மாசுக்கட்டுப்பாடு வாரியம் வலியுறுத்தியுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை : தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு, பலகாரம்தான். பட்டாசு வெடிப்பதில் அத்தனை மகிழ்ச்சி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடிக்க ஆசைப்படுவார்கள். தீபாவளி பண்டிகை நாளில் இரவு 10 மணிக்கு மேல் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று மாசு கட்டுப்பாடு வாரியம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

Don’t burst fireworks after 10 pm

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி தீபாவளி விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.

பட்டாசு வெடிப்பதினால் ஏற்படும் காற்று மாசு பற்றியும், அதிக சத்தத்துடன் வெடிக்கும் பட்டாசுகளால் ஏற்படும் தீமைகள் பற்றியும் விழிப்புணர்வு பிரசார செய்தி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 15 ஆட்டோக்களில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்டு பொதுமக்கள் கேட்கும் பொருட்டும் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

அரும்பாக்கத்தில் நடந்த விழிப்புணர்வு பிரசார வாகனங்களை மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் ரொமால்ட் டெரிக் பின்டோ தொடங்கி வைத்தார்.

இந்த பிரசாரத்தில், பட்டாசுகளை கவனமாகவும், விபத்தில்லாமலும் வெடிப்போம், பெரியவர்கள் உடனிருந்து பட்டாசுகளை வெடிப்போம், தண்ணீர், மணல் ஆகியவற்றை தயாராக வைத்திருப்போம், திறந்தவெளி மற்றும் பொது இடங்களில் கூட்டாக பட்டாசுகளை வெடிப்போம், இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணிவரை பட்டாசுகளை வெடிக்க மாட்டோம்.

அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்ப்போம், மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட அமைதியான இடங்களில் பட்டாசுகளை வெடிக்க மாட்டோம், குடிசைகள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் இருக்கும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்க மாட்டோம். ஒலியினை குறைப்போம், செவியினை காப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய உறுதி மொழி எடுக்கப்பட்டது. இரவு 10 மணிக்கு மேல் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English summary
Don't burst fireworks after 10 pm as it will disturb your neighbours. So follow the rules. These are the words of State Pollution Control Board.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X