For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜீவ் வழக்கு: 7 தமிழரை விடுவிக்க கூடாது- தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

ராஜீவ் வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்ய மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்யக் கூடாது என தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

7 தமிழரையும் விடுதலை செய்ய தமிழக அரசு 2016-ல் முடிவு செய்தது. இது தொடர்பாக அப்போது மத்திய அரசுக்கு கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டது.

Dont release Seven Tamils, Centre orders to TN

ஆனால் இக்கடிதத்துக்கு பதில் அனுப்பாமல் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 3 மாதங்களுக்கு இது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியதாம். அதில், 7 தமிழரை விடுதலை செய்யக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறதாம் மத்திய உள்துறை அமைச்சகம்.

English summary
Sources said that the Centre has sent a letter to Tamilnadu govt and ordered dont release Seven Tamils in Rajiv assasination Case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X