For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காய்ச்சலுக்கு ஊசி போடாதீங்க: எச்சரிக்கும் தமிழக சுகாதாரத் துறை

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: காய்ச்சல் சீக்கிரம் சரியாக ஊசி போட வேண்டாம் என்று தமிழக சுகாதாரத் துறை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

Don't take injection for fever: Warns TN health department

இது குறித்து தமிழக பொது சுகாகாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி கூறுகையில்,

காய்ச்சல் சீக்கிரம் சரியாக சில மருத்துவர்களும், பெரும்பாலான போலி மருத்துவர்களும் ஸ்டெராய்டு, டைக்லோபினாக், பாராசிட்டமால் ஊசிகளை போடுகிறார்கள். ஸ்டெராய்டு ஊசி போடுவதால் காய்ச்சலின் காரணம் சரியாகாது. ஸ்டெராய்டு ஊசியால் காய்ச்சல் அப்போது குறையுமே தவிர உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும்.

டைக்லோபினாக் காய்ச்சல் மருந்து கிடையாது அது வலி நிவாரணி. இந்த ஊசிகளை காய்ச்சலுக்கு போட்டால் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
அதனால் டைக்லோபினாக், ஸ்டெராய்டை காய்ச்சலுக்கு ஊசியாகவோ, மாத்திரையாகவோ எடுத்துக் கொள்ள வேண்டாம்.

பாரசிட்டமால் காய்ச்சல் மருந்து தான். அதை மாத்திரையாக உட்கொள்ளலாம். ஆனால் ஊசியாக போட்டால் வலி தான் அதிகம். இதனால் உடலில் தேவையில்லாத பிரச்சனை ஏற்படும். காய்ச்சலுக்காக மருத்துவர்களிடன் சென்றால் அவர்களின் ஆலோசனைப்படி மாத்திரை, மருந்துகளை மட்டும் பெற்று சாப்பிடுங்கள். மருந்து, மாத்திரை சாப்பிட்டும் காய்ச்சல் குறையாவிட்டால் மிதமான வெந்நீரில் துணியை நனைத்து நெற்றி, முகம், கை, கால்கள் என உடல் முழுக்க துடைத்தால் காய்ச்சல் விரைவில் குறையும்.

மருத்துவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து காய்ச்சலுக்கு தேவையில்லாத ஊசிகளை போடாமல் இருக்க வேண்டும் என்றார்.

English summary
TN health department has warned people not to take injection for fever.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X