For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாயமான விமானத்தை தேடும் பணியில் 'ரோபோடிக் கப்பல்'!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: கடலோர காவல்படைக்கு சொந்தமான மாயமான விமானத்தை தேடும் பணியில் ரோபோடிக் கப்பல் ஈடுபடுத்தப்பட உள்ளது.

இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான டோர்னியர் விமானம் கடந்த 8-ந் தேதி இரவு மாயமானது. அந்த விமானத்தில் 2 விமானிகள் உட்பட 3 பேர் இருந்தனர்.

விமானத்தை தேடும் பணியில் இந்திய கடலோர காவல் படை, தமிழக கடலோர காவல் படை மற்றும் புதுச்சேரி கடலோர காவல் படையினர் கடந்த 8 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணியில் 8 கப்பல்களும் ஐசிஜி போர் விமானமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Dornier Aircraft Search Continues

மேலும் சாகர்நிதி என்ற ஆய்வுக் கப்பலும் நேற்று முதல் விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. நீர்மூழ்கி கப்பல் ஒன்று நேற்றுமுன்தினம் நடத்திய தேடுதலின்போது கடலூர்-நாகை இடையே பழையாறு அருகே 850 மீட்டர் ஆழத்தில் இருந்து சமிக்ஞை கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதி கடலோர காவல் படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரோபோடிக் வசதியுடன் கூடிய தனியார் கப்பலையும் இந்த தேடுதல் பணிக்கு ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

English summary
The search for the missing Coast Guard Dornier aircraft and its three member crew continued with the involvement of multiple government agencies, even as an NIOT research vessel began work to profile sea-bed to zero in on the location of the disappeared plane.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X