For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிலநடுக்கத்தின் போது: செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும்

Google Oneindia Tamil News

சென்னை: நிலநடுக்கத்தின்போது முடிந்த வரையில் பாதுகாப்பாக இருக்க முயலுங்கள். சில சிறிய நடுக்கங்கள் பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான ஆரம்பகட்டமாக இருக்கலாம். எனவே, உடனடியாக பாதுகாப்பான இடங்களைச் சென்றடையவும்.

நிலநடுக்கத்தின் போது செய்ய வேண்டியவை/ செய்யக் கூடாதவை:

கட்டிடங்களுக்கும் இருந்தால்:

நிலத்தினை விட்டு தள்ளிச் சென்று ஏதேனும் ஒரு மேசையின் கீழ் சென்று விடுங்கள். நிலநடுக்கம் நிற்கும் வரை அதனை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அப்படி ஏதும் இல்லையெனில் கைகளால் முகம் மற்றும் தலையை மூடி ஏதேனும் ஒரு மூலையில் சென்று நின்று கொள்ளுங்கள்.

Dos and don'ts during an earthquake

கதவுகள், கண்ணாடிகள், சுவர்களுக்கு பக்கத்தில் இருக்கவே இருக்காதீர்கள்.

படுக்கையில் இருந்தீர்கள் என்றால், அங்கேயே ஏதேனும் ஒரு தலையணையை வைத்து தலையினையும் முகத்தினையும் மறைத்துக் கொள்ளுங்கள். பெரிய விளக்கிற்கு கீழ் இருக்காதீர்கள்.

உங்கள் வீட்டின் மின்சார இணைப்பும், பாதுகாப்பு அலாரமும் வேலை செய்கின்றதா என்பதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

வெளியில் இருந்தால்:

இடத்திலிருந்து நகரவே நகராதீர்கள்; கட்டிடங்கள், மரங்கள், தெரு விளக்குகள் போன்றவற்றின் பக்கத்தில் இருக்காதீர்கள்.

ஏதேனும் திறந்த வெளியில் இருந்தால், நடுக்கம் நிற்கும்வரை அங்கேயே இருங்கள்.

வாகனங்களில் இருந்தால்:

உடனடியாக வாகனத்தை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு இறங்கி விடுங்கள்.

தீ பிடிக்கும் விதமாக எதையும் பற்ற வைக்காதீர்கள்.

  • கட்டிடங்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்தால் லிப்ட் பயன்படுத்தாமல், படிக்கட்டு வழியாக வெளியே ஓடவும்.
  • மின்சாரம், தண்ணீர் குழாய், காஸ் இணைப்பு ஆகியவற்றை மூடவும்
  • எக்காரணத்தை கொண்டும் நெருப்பை பற்ற வைக்க கூடாது
  • இருளில் வெளிச்சம் தேவையென்றால் டார்ச்சை பயன்படுத்தலாம். தீக்குச்சி கூடாது
  • பழைய கட்டிடங்களுக்குள் பாதுகாப்புக்காக நுழைய கூடாது.
  • மிக அவசரம் என்பதை தவிர்த்து வேறு காரணங்களுக்காக செல்போனை பயன்படுத்த வேண்டாம்
  • வதந்திகளை நம்ப வேண்டாம். உரிய மீடியாக்கள், அமைப்புகளிடமிருந்து வரும் தகவல்களை மட்டும் நம்பவும்.
  • ஒருவேளை கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்க நேர்ந்தால், கத்தி கூச்சலிட வேண்டாம். மூச்சு திணறல் ஏற்படும்.
  • கர்ச்சீப்பால் மூக்கு, வாயை மூடிக்கொள்ளவும். கட்டிடத்துக்குள் இருப்பதை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த ஏதாவது பொருளை கொண்டு இடிபாட்டை அசைத்து காட்டவும்.
English summary
Stay as safe as possible during an earthquake. Be aware that some earthquakes are actually foreshocks and a larger earthquake might occur. Minimize your movements to a few steps that reach a nearby safe place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X