For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுவாதி கொலை வழக்கில் தொடரும் மர்மம்.. விடை தெரியாத 10 கேள்விகள்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், ஜூன் 24ம் தேதி நடைபெற்ற, சுவாதி கொலை வழக்கு தொடர்பாக ராம்குமார் என்ற இளைஞர், நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரத்தில் கைது செய்யப்பட்டதாக போலீசார் அறிவித்தனர்.

கொலை நடந்து 3 நாட்களுக்கு பிறகு ரயில்வே போலீசாரிடமிருந்து சென்னை போலீசார் அந்த வழக்கை மாற்றினர். இதன்பிறகு நாலைந்து நாட்களுக்குள் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையில் விடை தெரியாத பல முக்கிய கேள்விகள் இன்னும் இருக்கின்றன. நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் நிருபர்கள் அதில் சில கேள்விகளை துருவி துருவி கேட்டபோதும், கமிஷனர் பிடிகொடுக்கவில்லை.

கமிஷனரிடம் கேட்கப்படாத பல கேள்விகளுக்கும் இன்னும் விடை தெரியவில்லை. அந்த கேள்விகள் இவைதான்:

வந்ததும் இதே வேலையா?

வந்ததும் இதே வேலையா?

கடந்த ஏப்ரல் மாதம்தான் (3 மாதங்கள் முன்பு) வேலை தேடி சென்னை வந்து சூளைமேட்டிலுள்ள மேன்ஷனில் தங்கியுள்ளார் ராம்குமார். ஆனால், சுவாதியை 3 மாதங்களாக ராம்குமார் பின்தொடர்ந்ததாக போலீஸ் கமிஷனர் நேற்று தெரிவித்தார். குக்கிராமத்தில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வந்த ராம்குமார் வந்த உடனேயே சுவாதி மீது காதல் வசப்பட்டதோடு, 3 மாதங்களாக தைரியமாக பின்தொடர்ந்தது எப்படி?

பைக்கில் போனது யார்?

பைக்கில் போனது யார்?

கடைசியாக வெளியான சிசிடிவி காமிரா காட்சியில், கொலையாளி, பைக்கில் சுவாதி தனது தந்தையுடன் செல்லும் பைக்கை பின் தொடர்ந்த காட்சி உள்ளது. பரம ஏழையான ராம்குமாருக்கு சென்னையில் மூன்றே மாதத்தில், பைக் எப்படி கிடைத்தது?

ஏன் துவைக்கவில்லை?

ஏன் துவைக்கவில்லை?

ராம்குமார் வீட்டில் இருந்து சுவாதியின் ரத்தக்கறை படிந்த ராம்குமாரின் சட்டையை பறிமுதல் செய்ததாக போலீஸ் தரப்பு கூறுகிறது. சென்னையில் இருந்து, மீனாட்சிபுரம் வந்த ஒரு கொலையாளி, 1 வாரமாக அந்த சட்டையை துவைக்காமல் வைத்திருப்பாரா?

எரிப்பார்களே..

எரிப்பார்களே..

பொதுவாக கொலையாளிகள் தடயத்தை வைக்க கூடாது என்பதற்காக சட்டையை எரித்துவிடுவதை பல வழக்குகளில் பார்த்துள்ளோமே. மிகச்சிறிய அந்த வீட்டில் பெற்றோர், தங்கைகள் கண்ணில் சட்டைபடும் என்று ராம்குமார் அச்சப்பட்டிருக்க மாட்டாரா?

சட்டை போடாமல் மேன்ஷன் சென்றாரா?

சட்டை போடாமல் மேன்ஷன் சென்றாரா?

கொலை நடந்த பிறகு ராம்குமார், மேன்ஷனுக்கு சென்று, ஆடைகளை எடுத்துக்கொண்டு சொந்த ஊர் திரும்பினாராம். ரத்தக்கறை படிந்த சட்டையோடு அத்தனை பேர் வசிக்கும், மேன்ஷனுக்குள் ராம்குமார், எப்படி சென்றிருக்க முடியும்? சட்டையை கழற்றி பனியனோடு மேன்ஷனுக்குள் சென்றிருப்பாரா? அப்படி சென்றால் ஏன் என்ற கேள்வி வந்திருக்காதா?

அடித்தது யார்?

அடித்தது யார்?

கொலையை நேரில் பார்த்த சாட்சியமான தமிழ்செல்வன், கொலை நடைபெறுவதற்கு 10 நாட்களுக்கு முன்பு, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து சுவாதியை ஒரு வாலிபர் கன்னத்தில், பளார், பளார் என அடித்ததாகவும் சுவாதி எதிர்க்காமல் அடி வாங்கியதாகவும் கூறினார். ஆனால் கொலை செய்த நபர் வேறு என்று கூறினார். ஏன் சுவாதி அடிவாங்க வேண்டும்? அதுகுறித்து காவல்துறையிடம் ஏன் புகார் தரவில்லை?

வித்தியாச வீடியோ?

வித்தியாச வீடியோ?

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்குள் பேக்குடன் ஒரு நபர் நுழைவதை போன்ற சிசிடிவி காட்சிகள் முதலில் வெளியாகின. பிறகு அதையே மெருகேற்றி போலீசார் போட்டோவாக வெளியிட்டனர். ஆனால், சிசிடிவி உருவத்திற்கும், போட்டோவிற்கும் வித்தியாசம் இருப்பது போல அப்போதே, தெரிந்ததே? அதுமட்டுமல்ல, சிசிடிவி உருவம் ஆஜானபாகுவாக தெரிந்தது. முகம் பெரிதாக இருந்தது. கைதாகியுள்ள ராம்குமார் ஒல்லியாக உள்ளாரே?

வெளியான போட்டோ

வெளியான போட்டோ

ராம்குமாரை கைது செய்ய போலீசார் சுற்றி வளைத்தபோது, அவர் கழுத்தை பிளேடால் வெட்டியதாக போலீசார் கூறுகிறார்கள். ஆனால், ராம்குமார், தனது கழுத்தை, பிளேடால் வெட்டிக்கொண்டு இருந்த போட்டோ சமூகதளங்களில் வெளியாகியுள்ளது. படுபாதக கொலை வழக்கில் தொடர்புள்ளவனை யாருக்கும் தெரியாமல், சுற்றி வளைத்து பிடிக்கபோகும்போது யாராவது அந்த நடவடிக்கையை போட்டோ எடுப்பது சாத்தியமா? போலீசாரே போட்டோவும் எடுத்துக்கொண்டே பிடிக்கவும் சென்றிருப்பார்களா.. ?

அவசரம் ஏன்?

அவசரம் ஏன்?

சுவாதி கொலை வழக்கில் ராம்குமாருக்கு யாரும் உடந்தையில்லை, அவர் மட்டுமே குற்றவாளி என நேற்றே கமிஷனர் பேட்டியளிக்க வேண்டிய தேவை என்ன? பொதுவாக இதுபோன்ற வழக்குகளில், "உடந்தையாக யாரும் இருந்தார்களா என விசாரித்துக் கொண்டுள்ளோம்" என்றுதானே கூறுவார்கள்? ராம்குமார் அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும்போதே அவசரமாக இம்முடிவுக்கு வர போலீசாரை தூண்டுவது எது?

போலீஸ் மீது கோபம் ஏன்?

போலீஸ் மீது கோபம் ஏன்?

விசாரணை நடைபெற்றபோது, போலீசார் தங்களுக்கு தொல்லை தருவதாக முதல்வரிடம் புகார் செய்ய சுவாதி பெற்றோர் முனைப்பு காட்டியது ஏன்? சுவாதியின் நடத்தை குறித்து யாரும் கேள்வி எழுப்ப கூடாது என்று நடத்தை பற்றிய நன்மதிப்பை உடனடியாக நிறுவ சுவாதியின் தந்தையை தூண்டியது எது?

நண்பன் பெயர் வெளியானது எப்படி?

நண்பன் பெயர் வெளியானது எப்படி?

கொலை நடந்த சில தினங்களிலேயே பிலால் மாலிக் என்பவர் சுவாதியை கொலை செய்ததாக வாட்ஸ்அப்பில் செய்தி பரவியது. ஒய்.ஜி.மகேந்திரன் அதை ஷேர் செய்து பின் டெலிட் செய்தார். உண்மையிலேயே சுவாதிக்கு அதே பெயரில் ஒரு நண்பர் உள்ளார். இந்த பெயரை வைத்து வதந்தி பரவியுள்ளது. எப்படி அந்த நண்பர் பெயர் வதந்தியை பரப்பியோருக்கு தெரிய வந்தது?

சாமானியர்களின் சந்தேகங்கள்

சாமானியர்களின் சந்தேகங்கள்

இதுபோன்ற கேள்விகள் யாரையும் குறை கூறுவதற்காக எழுப்பப்படுபவையில்லை. போலீசார் இன்னமும் விசாரணையை முழுமையாக மேற்கொள்ள வேண்டியுள்ளதோ என்ற சந்தேகத்தின் அடிப்படையிலான சாமானிய மக்களின் கேள்விகள்தான் இவை.

English summary
So many un answered question remains in the Swathi murder case, will the police try to find the answers?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X