For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் - ஸ்டாலின்

அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டத்துக்கு குந்தகம் ஏற்படுத்த மோடி ஆட்சி முயற்சி செய்து வருகிறது என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் - ஸ்டாலின்

    சென்னை: அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டத்துக்கு குந்தகம் ஏற்படுத்த மோடி ஆட்சி முயற்சி செய்து வருகிறது. சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

    சென்னை கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் தொல் திருமாவளன் ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

    Dr Ambedkars birth anniversary celebrated in TN

    இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டத்துக்கு குந்தகம் ஏற்படுத்த மோடி ஆட்சி முயற்சி செய்து வருகிறது. சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்.

    மேலும் காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசின் முயற்சியைக் கண்டித்து வரும் எப்ரல் 16ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் அனைத்துக்கட்சி போராட்டம் நடத்தப்படும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

    அம்பேத்கரின் பிறந்தநாளை மதவெறி எதிர்ப்பு நாளாக கடை பிடிக்கிறோம். கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தமிழக அரசையே மிரட்டும் வகையில் பேசும் எச். ராஜா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.

    English summary
    We will put an end to Modi's government said DMK working president Stalin and Tirumalavan, Floral tributes the celebration of the 127th birth anniversary of the architect of Indian Constitution, Bharat Ratna Dr Bhim Rao Ambedkar in Tamil Nadu today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X